கோயில் குளமும் தொலைக்காட்சியுமே!
வாழ்க்கையாய்க் கொண்ட!
மனைவி!
அடுத்த ஆண்டுப் பதவி உயர்வு முதல்!
நாளைய சந்திப்பு வரை!
எதிர்காலத்திலேயே!
வாழும் மகன்!
குழந்தை குட்டி ஆனதும்!
இலக்கியம் மறந்த!
மருமகள்!
புகுந்த நாட்டுப் பண்பாட்டோடு!
ஒன்றி!
அடையாளம் தொலைத்த!
மகள்!
தமிழ் கிலோ எவ்வளவு?எனப்!
பேரம் பேசக் கூடத் தெரியாத!
நுகர்வோர் கலாச்சாரத்துப்!
பேரன் பேத்திகள்!
அனைவரும்!
எதிர்வீட்டு எழுத்தாளத் தாத்தாவின்!
இறந்த உடலைச்!
சூழ்ந்திருக்கும் இவ்வேளையில்!
அடுத்து!
யாருக்காகக் காத்திருக்கின்றன!
தாத்தாவின் தூவலில்!
மிச்சமிருக்கும்!
மைத்துளிகள்?

இ.பு.ஞானப்பிரகாசன்