இப்னு ஹம்துன்!
உணவுக்குப் பஞ்சமில்லை..!
உடுப்புகளும் குறைவில்லை..!
உறைவிடமோ ஒரு பிரச்னையில்லை..!
முக்கால்வாசி உலகத்தாரினும் !
மேலானவன் நீ - மிகையில்லை. !
வங்கியில் கணக்குண்டு!
வார்கச்சையிலும் இருப்புண்டு!
சில்லறைச் செலவுகளுக்கோ!
சஞ்சலங்கள் ஒருபோதுமில்லை!!
சிறிய அந்த செல்வந்த உலகினில்!
செல்லத்தக்க உறுப்பினர் தான் நீ..!!
அதிகாலை விழிக்கின்றாய்!
ஆரோக்யம் உணர்கின்றாய்! !
ஆசிர்வதிக்கப்பட்டவனல்லவா நீ!
இந்த வாரம் இல்லாமல் போன!
ஒரு பத்து இலட்சம் பேரினும்!!
யுத்த முகம் கண்டதில்லை!
இரத்த ஓலம் கேட்டதில்லை!!
பட்டினிப்பெருங்கொடுமை!
பரிதவிப்பின் பெருந்துயரம்!
பாதிப்புகள் உனக்கில்லை..! !
பாதி உலகின் மக்களைக் காணினும்!
பேறு பெற்றவன் நீ!
அன்பு மிக்க பெற்றோருனக்குண்டு!
பண்பு நிறை மனைவியோ - உன்!
பெருமைகளின் மகுடம்!!
ஆசிர்வதிக்கப்பட்டவைஉன் குழந்தைகள் !
அபூர்வமானவர்களில் நீ!!
'எழுதப் படிக்கத் தெரியாதவர் !
இருபது கோடிப் பேராம்'!
வாசிக்கும் நீ யோசிப்பதுண்டா?!
எத்தனை பெருமிதம் எனக்கு என்று!!
புன்னகை வசிக்கும் உன் முகம்!
இதயமும்!
இறைநன்றியை உச்சரித்தே !
இயங்கட்டும் என்றும்!!
-- !
H.FAKHRUDEEN!
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்) !
+966 050 7891953
இப்னு ஹம்துன்