கரன்சிக் காட்டிற்கு!
கண்கட்டிக்!
கொண்டுவரப்பட்ட!
இன்றைய மங்கை நான்.!
இங்கே!
பக்கவாட்டுச் சிறகுகள்!
பாதச்சக்கரங்கள்!
எல்லாம் முளைத்தன!
யாரும் கேட்காமலேயே!!
பிறப்பில்வந்த கரங்களை விடவும்!
பொருத்தப்பட்ட சிறகுகளில்!
பெருமிதம் அடைகிறேன்.!
'பழம் பாதங்களை விடவும்!
பயனுடையவை!
இப்புதிய சக்கரங்கள்'.!
கற்பிதங்களில் காண்கிறேன் !
அற்புதங்கள்.!
இருந்தும்...!
தொடரோட்டத்தில்!
துரத்திப்பிடிக்க..!
உயிரில்லா உயர்வாக!
பணமென்னும் பட்டாம்பூச்சி!
அதனோடு!
தினம்தினம் கண்ணாமூச்சி.!
நாளைய வானின்!
நூல் பட்டங்களுக்காக!
காகித அட்டைகளுக்கு!
வர்ணம் தீற்றுகிறேன்.!
பள்ளிப் புத்தகத்தில்!
புதையுண்ட நினைவாக!
பழைய மயிலிறகு.!
வானில் பறக்க!
விரைகிற அவசரத்தில்!
தூளிக்குழந்தைக்கான!
தருணங்கள் அமையாமல்!
தேங்கிப்போகுதென் தாய்ப்பால். !
- இப்னு ஹம்துன்
--------------------------------!
H.FAKHRUDEEN!
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)!
+966 050 7891953
இப்னு ஹம்துன்