இப்னு ஹம்துன். !
கணந்தோறும் நிகழ்கின்றன !
சொற்களின் பிரசவங்கள். !
சூல் கொண்ட அர்த்தங்களை !
சுமந்து வரும் சொற்கள் !
அடைகின்றன !
தாய்மையின் பூரிப்பு! !
சுமத்தப்பட்ட அர்த்தங்களை !
சேர்த்திழுக்கும் சொற்களுக்கோ !
செக்கு மாடுகளின் பரிதவிப்பு. !
சில நேரங்களில் சில சொற்கள் !
சுவர்கள். !
சில கதவுகள். !
வாழ்க்கைப் பயணத்தில் !
வழி நெடுகிலும் சில கண்ணிவெடிகள் !
கை கால் பட்டாலே ரத்தக்களறி. !
வாழ்வின்நெடுஞ்சாலைகளில் !
கனிமரங்களும் உளதே. !
பசியைப் போக்கவே !
பழுத்திருக்கும் சொற்கள். !
பாலைப்போலவும் சொற்கள் !
பாலகர்களுக்கு ஊட்டமளிக்கும். !
பாலை போலவும் சொற்கள் !
ஒட்டகங்களுக்கே உகந்ததாக! !
வாழைப்போலவும் சொற்கள் !
வளர்த்திடும் தலைமுறைகள் !
வாளைப்போலவும் சொற்கள் !
வீழ்த்துவதே நோக்கமாக..! !
ஆடை விலக்கும் சொற்களின் !
ஆன்ம அர்த்தங்களுள் !
வழிந்துக் கொண்டிருக்கிறது !
வருத்தமொன்று! !
அது...... !
வயற்காடுகளில் !
வெட்டியான்களும் !
வந்தமர்ந்துக்கொள்ள............. !
மயானங்களிலும் !
உழுதுக்கொண்டிருக்கிறார்கள் !
மானுடத்தின் சில விவசாயிகள். !
-------------------------------- !
H.FAKHRUDEEN
இப்னு ஹம்துன்