வெள்ளமாய் பொங்கிப் பிரவாகித்து அதன்பாட்டில்!
கோடையின்றிக் கொட்டும் மழை!
மூழ்குவோர் மூழ்க!
நீந்துவோர் நீந்த!
கரைசேர்க்க யாருண்டு!
முகில் குவிந்த பவ்வல்!
வான்சிவந்து இடி!
தவளை கத்தி மழைஓயா!
நீரை ஏவி விட்ட பூமி!
முகிலாய் குவித்தவானம்!
யார் யார்!
ஊன்றுகோலற்ற கிழவன் வானம்!
தள்ளாடும் பூமிக்கிழவி தகராறா?!
புரிந்துணர்வு எங்குண்டு!
சீலைப்பேன் புளுத்து!
உடலெல்லாம் ஊரும் அவஸ்;தை!
சிந்தனைனயில் சீழ் கட்டி!
தெறிக்கும் வலி!
பழம்புண் ஆறா!
அனைத்துக்கும் வெயில் வேண்டும்.!
எஸ்.நளீம்