எந்தவொரு மேகக்கூட்டமும்!
எனக்கென்று நிற்காதவொரு!
பெரும்பரப்பில் நான்;!
பேசக்கேட்க யாருமற்றுத்!
தனித்திருக்கிறேன் !!
இப்பொழுதுக்குச் சற்றுப்பின்!
வலி மிகும் தொனியுடனான!
எனது பாடல்!
மணற்புயலடித்துக் கண்ணையுருத்தி!
உடற்புழுதியப்பும்!
இப்பாலைவனம் பூராவும்!
எதிரொலிக்கக் கேட்கலாம் !!
எனைச் சூழ ஒலித்தோயும்!
எந்தவொரு அழைப்பும்!
எனக்கானதாக இருப்பதில்லை ;!
எனைச் சிதைத்து ஆளும்!
இப் பெருவலியையும்!
எவரும் உணர்வதில்லை !!
இப்படியே போனாலோர் நாளென்!
முதல்மொழியும் மறந்துவிடுமென!
எண்ணிச் சோர்ந்த பொழுதொன்றில்!
விழும் துளியொவ்வொன்றுமென்!
செவிக்குள் ரகசியம் பேசித்!
தசை தடவிக் கீழிறங்கி,!
மணலுறிஞ்சி மறைந்து போக!
சிறு தூறலாய் மழைத்துளி வீழ்ந்து!
நெஞ்சம் நனைக்கக் காண்பேனா?!
எனைச் சூழ்ந்திருக்கும்!
தனிமையையும் , மௌனத்தையும்!
பெரும் சாத்தான் விழுங்கிச்சாக - என்!
தோள்தொட்டுக் கதை பேசவொரு!
சினேகிதம் வேண்டுமெனக்கு.!
நீயென்ன சொல்கிறாய் ?!
!
- எம். ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை

எம்.ரிஷான் ஷெரீப்