புலம்பி ஆகுமோ தோழா - எசேக்கியல் காளியப்பன்

Photo by Peter Olexa on Unsplash

சிவந்த வானுமே!
விடியலின் முன்னே!
சிரிக்க மயங்காதே தோழா! -அது!
தவழ்ந்து வீழுமத்!
தணலின் முன்னுமே!
தன்னைக் காட்டுமே தோழா!!
புரட்சி என்பதை!
ஆயு தத்தினால்!
புரிய வைக்கவோ தோழா!--அது!
புயலின் நாசமாய்ப்!
புரட்டிப் போனபின்!
புலம்பி ஆகுமோ தோழா?!
எசேக்கியல் காளியப்பன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.