இருபக்க இறக்கையாய் ஆடும் இரும்பு கேட்- !
சிமெண்ட் தூண்களில் !
சதுரத் தலைகளில் ஏற்றிய!
அறுமுகக் கண்ணாடி விளக்குகள்!
கும்பம் குமிழுடன்.!
அடையாய் வந்த!
தவிட்டுக் குருவிகள் சுற்றிலும் கொலுவாய்!
மணிமண்டபம் என்ற கற்பனை போல!!
அருகில் தொங்கும் தபால்பெட்டி!
அரங்கம் அமைக்க!
ஒற்றைக்குருவி!
ஒயில் நடனம் போல் காலைத்தூக்க...!
அவளை விளித்து அங்கு பார் என்றேன்.!
மெல்லிய குரலின் அசைவிலும்!
அசைந்தது எல்லாக் காட்சியும்.!
கணத்தினில் பறந்தன கண்களை விட்டு.!
'மெளனம் கலையாது பேசி இருக்கலாம்'.!
எப்பொழுது முடியும்?!
!
-- சிதம்பரம் நித்யபாரதி

சிதம்பரம் நித்யபாரதி