இன்று!
என்ன ஆனது?!
வைகறைப் பறவைகளும் வரக் காணோம்.!
ஏதோ!
இரகசியம் விழுங்கிய தோரணையில்!
தலையும் அசைக்காத தோட்டச் செடிகள்.!
புன்னகை மலர்த்தாப் பூக்கள்.!
வானத்து நீலமும் வெள்ளியும் கூட!
மாறா ஓவியத் திரையாய்த் தலைமேல் கவிய...!
கண்களை மூடிக் கொண்டேன்.!
பின்காதில் காற்று கிசுகிசுத்தது:!
அசைவே அசைவின்மை!
அசைவின்மையே அசைவு.!
கண் மடல் அவிழ்த்தால்!
கணத்தினில் பார்வையைப் புதுக்கும் மலர்கள்.!
வண்ணவில் தோன்றும்பார் என நீலமேகம் போர்த்தி!
ரசவாத உறுதியளிக்கும் வானம்...!
இன்று !
என்ன ஆனது? !
!
--- சிதம்பரம் நித்யபாரதி

சிதம்பரம் நித்யபாரதி