ரத்தம்!
உறைந்த சாலையில்!
பிரேதங்களின் மீது!
நடப்பதாகவே!
ஒரு உணர்வு.!
மனித!
எச்சங்கள் எல்லாம்!
வளமாகிப் போனதால்!
பூக்களை கூட!
நெருங்கமுடிவதில்லை!
பிணவாடை.!
கல்லறைகளுக்கு!
வைத்தே தேசத்தின்!
மலர்கள் தீர்ந்து விட்டதால்!
விற்பனைக்கெல்லாம்!
இப்போது பிளாஸ்டிக்கில்.!
துப்பாக்கி தோட்டாக்களில்!
கணிதம் படிக்கும்!
அந்த அழகுச் சிறுவன்!
நாளை!
என்னவாவான் ?!
இந்த இடுகாட்டுப்!
பூமியில்!
நாளை பிறக்கும்!
குழந்தைக்கும்!
கந்தக ஆயுதம்!
தயாராகிவிட்டது.!
கதந்து போகின்றன!
நாட்கள்!
என்று தீரும்!
இந்த!
வன்முறை வாழ்க்கை ?!
!
-சுதாகரன்!
கொழும்பு
சுதாகரன், கொழும்பு