அவளின் முகம் பார்த்தேன்!!
புதுமலராய் புன்னகைத்தாள்!!
நானும் புன்னகைத்தேன்!!
அழகாய் தானிருக்கின்றாளென்று.!
நிலம் பார்த்தேன்!
அவளின் பாதம் பார்க்க!!
ஒன்றுமட்டும் தரையில்!!
பிறவி ஊனம் போல.!
மீண்டும் விரக்தியாய்!
அவள் முகம் பார்த்தேன்!!
எனைப் பார்த்து!
மனதுக்குள் சிரித்தாள்!
ஏளனமாய்!!
உடல் அழகை ரசிப்பவனுக்கு!
எங்கிருந்தடா தெரியும்?...!
என்னுள் ஆழ்மனதும்!
ஓர் அழகுதானென்று!,!
என நினைத்திருக்கலாம் அவள்!.!
அவளுக்கு!
எங்கிருந்து புரியும்?...!
என்னில் விழுதொன்றாயிருந்து!
விபத்தொன்றில்!
தன்னிருக் கால்களிழந்து...!
அதன் நிமித்தம்!
மாண்டு போன...!
என் அன்பு மனையாளின்!
நினைவுகள்!!
என் மனதில்!
வந்து போனதென்று!.!
என்றும் இனிய...!
-சிபி.பாபு
சிபி பாபு