உயிரோடு குளிக்குள்ளே உடலங்கள் உறங்க! !
கல்லறைக் கடிதங்கள் நன்றியுடன் முடிக்க! உண்மைக்கு அங்கே உருவம் இல்லை!!
எம் அழிவு அயல் நாட்டிற்க்கு ஒரு இழிவு! மண்தெறிக்க மழை பொழிப்பினும் வானம் கிழிய இடி இடிப்பினும்! !
புளுதி புலர காற்றடிப்பினும்!... !
உச்சி வெயில் மேல் மண்டையில் வேர்வைகளால்! !
ஏதேனும் எழுதினும்......! !
ஈழத்திற்காய் விழுந்தால் விதை!.. எழுந்தால் மரமென்போம்..! !
யார் யாரோ ஈழத்தின் பெயரை வைத்து அரசியல் நடாத்துகின்ரனர்.. ''உயிரைக்கொடுப்பான் வன்னித்தமிழன் அதற்கு உரத்தைக் கொடுப்பான் உலகத் தமிழன்'' குரல் கொடுக்க சனமுண்டு!! இருந்தும் கை கொடுப்பார் யாருமின்றி எம்மை..!
விருந்துண்ட கைகளைப்போல் !
கழுவிச் சென்ரனர் பலர்?! !
மாவீரர்கள் தாங்களே உயிரின் எழுத்தாகி கல்வெடினுள் பதிந்தார்கள்.., !
துளையிட்ட மூங்கில்களாய் இருந்து மௌனத்தின் சப்தத்தால் கானமாய் இசைந்தார்கள்..!
எவ்வளவு தான் அழிவின் மத்தியில் அழகாய் அலைந்தாலும்.! !
பகை அவன் பதுங்கி வருவான் பகலில் பயந்து!!! !
எம்மவரோ கொஞ்சம் தும்மினால் பதறியடித்தோடுவான் அவன் பன்மை சிதற புலிகளால் முடிந்தது உயிரின் முகம் கலையும் வரை உண்மையாய் களமாடுவது என்வயதிற்கு தகுந்தது அலங்கரித்த தமிழினால் தரை தளைக்க தன்மானத்துடன் போராடுவது.. முட்கம்பிகளோ முன்னே!! காவலரண்களோ பின்னே; பிறப்பும் முன்னே இறப்பும் பின்னே; கவலைகளோ! முன்னே சில கவிதைகளோ பின்னே இருந்தும்! !
ஏன் எம் நாடோடி வாழ்க்கை மட்டும் நடுவில் நிலைக்கின்றது? உண்மையில் நான் தாயகத்தில் இருந்தபோது! !
ஈழத்தின் அருமை புறியேன்! !
பெருமை அறியேன்! ''இது சூழ்நிலை''. நன்மை தனை நான்கு பேருக்கு நன்றி பாராது உழைத்தவன் கடைசி வரலாற்றை சற்று வகுத்து கூறுகின்றேன் சற்று சிந்தியுங்கள்- ((இரும்புத்தொப்பி அணிந்து ஒருவன்,!
சில பல ஆயுதங்கள் ஏந்தி இன்னொருவன்!! !
நட்ட நடு நிசியில் சுதந்திரக்கனவு காணவிடாமல் கதவை தட்டும் ஒரு நல்லவர் கூட்டம்)) !
திறந்து பார்த்தால்!!!...?;;!
என் நிசியின் உறக்கம் கழித்து விழி ஓரம் இமைகள் மெல் திறக்க! !
வீதியோரம் ஏதோ கருகிய வாடை கண்டு கொண்டேன் அதில் எரிவது அவன் இடது கால் தொடடை என்று!! !
ஐயகோ! !
அங்கே பாருங்கள் எம் அழகிய தேசத்தில் அழுகியவாடை! !
உற்று நோக்குங்கள் அவர்களின் சுதந்திர தேசம் சுந்தர வீதியில் எரிகின்றது..! தாயின் உடலம் கிழித்தவனை அண்ணனின் தேகம் புதைத்தவனை! !
மண்ணின் பெருமை வீதிக்கு இழுத்தவனை! உயிரோடு உலவ விடலாமா?? அங்கே பொய்மை உருவமாகிறது உண்மை அருவுருவமாகிறது!! !
கிழக்கிலே பகலவன் படை எடுக்க மேற்க்கிலே அஸ்தமனமாக வடக்கும் தெற்க்கும் என்ன நாதியற்று போனதா?...! ஒரு முறை நான் இலங்கையனை கேட்டேன்! !
ஈழத்தவனை அல்ல இலங்கயனை!! தமிழரின் நிலம் எங்கே என்று! அதற்க்கு அவன் இதோ!! !
என்றான் உச்சி குளிர்ந்தது!.. !
அங்கே பிணங்களின் தடையம் சுடுகாடுதான் விடையம் சரி மாவிர மக்களின் ஆலயம் கேட்டேன்! !
இதற்க்கும் அவன் மூடிய குளிகளை காண்பித்தான் ம்..ம் அந்த மடையன் ஒரு விடையத்தை அறிவில் இருந்து விலக்கி விட்டான் குளிக்குளே விதை மூடி இருப்பினும் அதன் வாழ்விடம் ஏனோ நாளை பகலவன் பார்வையில் தான்
ஜென்சன்