அவள் சிரித்தால் அன்று பூப்பேன்! - வித்யாசாகர்

Photo by Sajad Nori on Unsplash

நீ வந்து வந்து செல்கிறாய் உள்ளே!
பின் வராமலும் கொள்கிறா யென்னை!
கால்தடம் நீ பதித்தஇதயம் பாவம் !
நீ பார்க்காத இடமதில் நோகும்;!
பூப்பூத்த ஒரு கணம் போலே!
உள்ளே சிரிக்கசிரிக்க மலர்ந்தாய்ப் பெண்ணே!
உன் கால்கொலுசு கதைகேட்கக் கேட்க!
வருகையின் பூரிப்பில் உயிர்பூத்தேன் நானே;!
ஒருநொடி பார்த்தாய் பார்த்தாய் - ஒரு யுகம்!
தொலைத்து வீழ்ந்தேன், இனி!
வரம் ஒன்று வேண்டி - அதில்!
உனக்கே உனக்கேப் பிறப்பேன் பெண்ணே!!!
முகமதில் தங்கமது பூசி - பள பளக்கும்!
கண்கள் சிரிக்கும், கனவதிலும் ஒளியின் வெள்ளம்!
உன் தேன்துளி இதழசைய சிந்தும், சொல்லாமல் !
சொல்லுமுன் காதல் என் காலமதை கண்மூடி வெல்லும்;!
கதைகதையாய் நீ சொல்லக் கேட்டு!
என் நொடிப் பொழுதின் ஆயுள் நீளும்!
நீ நகம் கடித்து வீசும் தருணம் - காதல்!
தீ பிடித்து ஜென்மமது தீரும்;!
கிட்டவந்து வந்து நீ போகும் வாசம்!
எனை எரித்தாலும் போகாது பெண்ணே!
இவன் அர்த்தம் ஒன்றென்று ஆயின் - அது!
நீயே நீயே - நீயன்றியில்லை
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.