எனது பாத்திரம் இதுவாகி - டீன்கபூர்

Photo by QPro on Unsplash

நேற்றும் பசி விழுங்கியது என்னை.!
இன்னும் அது வயிற்றுக்குள் ஊடுருவி!
அட்டகாசித்துக்கிடக்கிறது. !
நான் ஏந்தும் பாத்திரத்தின் சரியான வடிவத்தை!
எவரும் கண்டுகொள்ள மறுத்துப்போய்!
நான் அணியும் உடையின் !
அழுக்கைச் சுவாசித்தபடியாக!
நழுவுகிறது மானிடம்.!
என் குழந்தைகளின் வாழ்வின் வடிவம்;!
எனது வாழ்வின் வடிவம் பற்றியெல்லாம்!
என் அழுகைக்குள் முடங்கிக்கிடக்க!
என்னை அயராது பாடுபொருளாகிக் கிடக்கிறது!
தனிமை.!
பிசின் தள்ளிய முருங்கைக்காய் கறிபோல!
வாழ்க்கை உப்புச்சப்பில்லாமல் நகர்வதாக!
ஒருவன் பேசினான்.!
குயிலின் வழுவழுத்த தனம்!
காக்கையின் கூட்;டை கள்ளத்தனமாக்கும்.!
அழகிய குரலில் என்னதான் மிஞ்சும்.!
ஒரு கூட்டிற்கு உழைக்க இயலாத வாழ்வு.!
எனது பாத்திரம் இதுவாகி…………..!
என்னிடம் பேசுகிறது.!
- டீன்கபூர்
டீன்கபூர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.