தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
இது மாலை நேரத்து மயக்கம் - தமிழ்ஹாசன்
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
இது மாலை நேரத்து மயக்கம் - தமிழ்ஹாசன்
Photo by
engin akyurt
on
Unsplash
அந்த ஓர்!
மாலைப்பொழுது!!
மாலைச்சூரியன்!
மறைந்து போகும் நேரம்!
மலர்கள் நார்களில்!
தூக்கிலிடும் நேரம்!
தடதடக்கும்!
புகைவண்டி!
பரபரக்கும்!
பள்ளிப்பேருந்து!
ஊர்வலம் போகும்!
ஊர்திவண்டிகள்.!
உணவைத்தேடி அலையும்!
உள்ளூர் சுகவாசிகள்!!
காற்று தந்த!
முத்தத்தால்!
காணாமல் போகும் இலைகள்!!
இலைகளைத் தேடும்!
காவலராய்!
கானக்குயில்கள்.!
சாலையோரப் பூக்களாய்!
மாணவிகள்!!
பூக்களைச் சுற்றும்!
தேனீக்களாய்!
மாணவர்கள்!!
ஜன்னலோரப் பேருந்தில்!
கரம்காட்டும்!
கைகுழந்தை!!
தெருவோர!
தெய்வங்களாய்!
தேநீர்கடைகள்.!
தெய்வங்களை!
வழிபடும் பக்தர்களாய்!
மானிடர்கள்!!
அர்ச்சனை செய்யும்!
பூக்களாய்!
மாலைநாளிதழ்கள்!!
இவைகளின்!
மத்தியில் நான்.!
சற்றே மயங்கிய நிலையில்!!
தேகத்தால் அல்ல.!
மோகத்தால்!
இசையெனும் மோகத்தால்!!
இளைப்பாறும் வேளையில்!
இசையைக் கேட்டேன்!
இறைவனைக் கண்டேன்!!
தினந்தோறும் செல்லும்!
ஒற்றையடிப்பாதை!
ஒதுங்கிய நிலையில்!
மரங்கள்!
மரங்களின் வழியில்!
மலர்கள்!
மலர்களின் திசையில்!
நான்.!
என்னைச்சுிலும்!
இசை!!
வேறென்ன வேண்டுமெனக்கு?!
ஒவ்வொரு நாளும்!
இதே நேரம்!
இதே மயக்கம்!
ஒவ்வொருவிதமாய்!!
இசையின் முடிவில்!
மயக்கம்!
மயக்கத்தின் முடிவில்!
நான்.!
இதோ,!
இதே மயக்கத்தோடு!
மீண்டும் மயங்கத்!
தயாராகிறேன்,!
மற்றொரு!
மாலைப்பொழுதை நோக்கி
தமிழ்ஹாசன்
Related Poems
நிர்வாண உண்மை
காதல் கொள்
நான் விரும்புவதெலாம்
கனாக்கண்டேன் தோழி
வதந்தி
இழை பிரிந்த மௌனங்களின் கதைச்சித்திரம்
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.