இல்லாதாரும் இலவசங்களும் - ராமலக்ஷ்மி

Photo by FLY:D on Unsplash

எழுத்தாலோ எண்ணத்தாலோ!
செயல்படுத்தும் திட்டத்தாலோ!
எழும்பும் விளைவுகள்!
எளியவனை இயலாதவனை!
எழுந்துநிற்க வைத்தால்!
எத்தனை நலம்?!
ஏங்கிநிற்கிறான் என்பதற்காக!
கூனியே கையேந்தவிடுவதா!
அவன்வாழ்க்கைக்கு பலம்? !
'இனியொரு விதி செய்வோம்!
அதைஎந்த நாளும் காப்போம்!
தனியொருவனுக்கு!
உணவில்லையெனில்!
ஜகத்தினை அழித்திடுவோம்!'-!
பசித்தவன் கேட்டுவிட்டு!
பரவசப் படட்டுமென்றா!
பாடினார் பாரதி?!
இல்லாதவன் கேட்டுவிட்டு!
இங்கெமக்குக் குரல்கொடுக்க!
இனியொரு நல்லவன்!
இதுபோலப் பிறப்பானா என!
நன்றியில் நனைந்து போக!
வேண்டுமென்றா!
எண்ணினார் பாரதி?!
பாரதம் தன்னிறைவு கண்டு!
பார்புகழத் தலைநிமிர்ந்து!
எழுந்துநிற்க அல்லவா!
எழுதினார் அந்தமகாக்கவி! !
முற்றிலும் முடியாதவனா!
தவறில்லை போடலாம்சோறு!!
ஆனால்..!
முடிந்தும் முயற்சியற்றவனா!
இயன்றால்!
வேளாவேளைக்குக்!
கூழோகஞ்சியோ கிடைத்திட!
வேலைக்கு வழிசெய்து-!
உழைப்பின் உயர்வை!
உன்னதத்தை!
உணர்த்திடப் பாரு!!
அது விடுத்துத்!
தானம் என்றபெயரில்!
தந்துதந்து அவனை!
தன்மானம் மறக்கச்!
செய்வதிடலாமா கூறு! !
இல்லாதவனிடம் கொள்ளும்!
இரக்கமும்!
கலங்கிநிற்பாரிடம் காட்டும்!
கருணையும்..!
அவரை!
முன்னேற்றப் பாதையில்!
செல்லத் தூண்டும்!
முயற்சியை வேகத்தை-!
ஆர்வத்தைத் தாகத்தைக்!
கொடுக்க வேண்டியது!
அவசியம்.!
முட்டுக்கட்டையாய்!
அயற்சியை சுயபச்சாதாபத்தை-!
அலட்சியத்தை சோம்பலைத்!
தராமல் பார்த்திடல்!
அத்யாவசியம்! !
தனியொருவனுக்கு உணவில்லாத!
ஜகத்தினை அழித்திடும்!
சாத்தியம் இல்லாது போனாலும்-!
சாதிக்க வேண்டிய ஜகம்!
இலவசங்களால்!
சக்தி இழந்திடாதிருக்க!
சிந்திப்போமே!!
பொன்னான பொழுதினைத்!
தூங்கியே கழிப்போரையும்-!
செல்லும்பாதையில் களைத்துத்!
துவண்டு விழுவோரையும்-!
தூக்கி நிறுத்தும்!
தூண்டுகோலாய் நாமிருக்க!
யோசிப்போமே!!
தத்தமது காலாலே!
வீறுநடை போட்டிடத்தான்!
பழக்கிடுவோமே
ராமலக்ஷ்மி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.