என் தேவதை இருக்குமிடம் - ப.மதியழகன்

Photo by Sajad Nori on Unsplash

பசியடங்க உண்பதெல்லாம் !
ருசியற்றுப் போனது !
கடந்து செல்லும் பாவைகளிடத்தில் !
உன் சாயல் தெரிந்தது !
திசையெங்கும் உன் வாசம் !
வானெங்கும் உன் எழில் தோற்றம் !
தோட்டத்தில் மலர்ந்துள்ள பூக்களெல்லாம் !
என்னிடத்தில் !
உன்னைப் பற்றி நலம் விசாரிக்கின்றன !
'அவள் பொன்மேனியை !
மழையாய் நான் சற்று !
உரசலாமா'- என்று !
கருமேகம் கூட !
என்னைக் கிண்டல் செய்கிறது !
'அவள் கைகளில் தவழும் குடையாக !
நீ பிறந்திருந்தால் !
அவள் கூடவே இருக்கலாமென்று'- !
கதிரவன் என்னைப் பார்த்துக் !
கண்சிமிட்டியது !
'சொகுசுவாகனம் இல்லையென்று !
கலலைப்படாதே !
மேகங்களில் நீ அவளுடன் !
உல்லாசமாய் ஊர்வலம் செல்லலாமென்று' !
கிளியொன்று பறந்தோடி வந்து !
காதில் கிசுகிசுத்தது !
நேற்றிரவு என்னைப் பற்றிய !
நினைவுகளில் ஆழ்ந்து !
அவள் கன்னம் சிவந்ததாக !
வெண்ணிலா என்னிடம் !
ரகசியம் சொல்லிச் சென்றது !
'உனக்குறியவளின் மூக்குத்தியாக !
நான் மண்ணில் வந்து !
ஜொலித்திடவா' - என்று !
அனுமதி கேட்டு !
வான் நட்சத்திரங்கள் !
என் வீட்டு வாசலில் !
வரிசையில் காத்திருந்தன !
'என்னைப் பற்றிய கனவுகளின் !
இடைவிடாத தொந்தரவுகளால் !
உறக்கம் வந்து அவளைத் !
தழுவுவதே இல்லை' - என !
புவிமகள் வந்து புது செய்தியொன்றை !
விடியலில் தந்தாள் !
'தேன்நிலவுக்கு தேவலோகம் !
வந்துவிடுங்கள்' - என்று !
தேவேந்திரன் வேண்டுகோள் வைத்தான் !
இந்திரனிடம் நான் சொன்னேன் !
என் தேவதை இருக்குமிடமே !
எனக்குத் தேவலோகமென்று
ப.மதியழகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.