எங்கள் கிராமத்து ஞானபீடம் - நா.முத்து நிலவன்

Photo by Paweł Czerwiński on Unsplash

காலை வணக்கத்தில் !
'நேர் நில்' சொல்லியும் !
நிமிர்ந்து பறக்கச் சக்தியற்று !
தர்மசக்கரத்தை மறைத்து !
தேசியக்கொடி தரை பார்க்க, !
மாணவர் ஊர்வலம் !
மரத்தடி வகுப்புக்கு !
மவுனமாய்ச் செல்லும். !
ஐந்து வகுப்பிலும் !
அறுபத்தேழு பேர்சொல்லி !
வருகை பதிவதற்குள் !
மணியடித்துவிடும், !
அடுத்த வகுப்பு துவங்கும். !
பெரியாரைப் பற்றிய !
உரை நடைக்குமுன் !
கடவுள் வாழ்த்தோடு !
செய்யுள் தொடங்கும் !
உலகப் படத்தில்- !
பாற்கடலைத் தேடும் !
இலக்கியம். !
ஆண்டவனைக் காப்பாற்றும் !
அறிவியல். !
ஆள்பவரைக் காப்பாற்றும் !
வரலாறு. !
வறுமைக் கோடுகளை மறைத்து !
வடஅட்சக் கோடுகளைக் காட்டும் !
புவியியல். !
கடன்வாங்கச் சொல்லித்தரும் !
கணக்கு. !
கிழிந்த சட்டை, !
நெளிந்த தட்டோடு !
அச்செழுத்துக்களை மேய்ந்த !
அஜீரணத்தில் மாணவர். !
'எலேய்! எந்திரிச்சு வாடா' !
அவ்வப்போது வந்து !
அழைக்கும் பெற்றோர். !
உபகரணங்கள் இல்லாமல் !
பாவனையில் நடக்கும் !
செய்ம்முறைப் பயிற்சி. !
அவசரத்தில் !
தின்றதை வாந்தியெடுக்கும் !
தேர்வுகள். !
பழைய மாணவர் எம்.எல்.ஏ கி !
பள்ளிக்கு வந்தார். !
சிரியர் கையை !
தரவாய்ப் பற்றி, !
'கோரிக்கை ஏதுமுண்டா !
கூறுங்கள்' என்றார்- !
'நிரந்தரப் படுத்தணும் !
நீயும் சொல்லணும்' !
திறந்த உலகம்தான் !
சிறந்த படிப்பாம், !
எங்கள் பள்ளிக்குக் !
கதவே கிடையாது- !
கட்டடம் இருந்தால்தானே? !
'எங்கள் பள்ளி நல்ல பள்ளி !
கட்டடம் இரண்டு பூங்கா ஒன்று' !
-நடத்துவார் ஆசிரியர். !
'எங்கேசார் இருக்குது?' !
மரத்தடி மாணவன் !
எழுந்து கேட்பான். !
'புத்தகத்தைப் பார்ரா' !
போடுவார் ஆசிரியர். !
போதிமரத்தடியில் !
புத்தருக்கு ஞானம், !
புளியமரத்தடியில் !
மாணவர்க்குப் பாடம். !
இதுவே- !
எங்கள் கிராமத்து !
ஞானபீடம்! !
-- நா.முத்து நிலவன்
நா.முத்து நிலவன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.