கறுத்த மச்சான் கள்ளச் சிரிப்போடி - கண்ணப்பு நடராஜ்

Photo by Didssph on Unsplash

கண்ணப்பு நடராஜ் !
நேசம் கொண்ட நெய் நிலத்து !
நெல் மணிக்கு நீர் கொடுக்க !
நீள் வரம்பு நீண்டு நிறைந்திருக்க !
காற்றடிக்கக் காகம் பறக்க !
கனத்த பனம் பழம் மொத்தன மோத !
போகம் பெரும் போகம் !
செல்லமாய் சிரி பெண்ணே !
செவத்தப் பச்சை சேர்ந்திடிப்போம் !
சேதி சொல்ல செவியைக் கொடு !
செவ்விளநீர் கோதிக் கிடக்கு !
பச்சைச் செம்பட்டான் பழுக்கப் புடுங்கிப் போடு !
வயலுக்குள் காலைக் குளிர் !
காலைக் குளிர் கூசுது கதிர் !
தளிர் பட்டு வெடிக்குது மொட்டு !
வயலுக்குள் வாலைக் குமரி !
செல்லமாய்ச் சிரி செவத்தப் பெண்ணே.. !
யாழ் நிலமெல்லாம் வாழ்த்த வாயெடுக்க !
கட்டுவன் மண்ணிலொரு அடுப்புப் பிடியடி !
பொய்யர் புளுகரின் !
வாய்க்கு வையடி நெருப்பு !
ஒனறே குலமடி ஓலையை வையடி !
அக்கா தங்கைச்சிக்கு !
நல்ல தமிழ்ச் சொல்லைச் சொல்லிக் கொடடி !
காகம் கரையுது !
கட்டுவன் மண்ணிலொரு அடுப்புப் பிடியடி !
கூரைக்கு மேலே கூவுற கோழியைக் கூப்பிடு கூப்பிடு.. !
வானம் சிரிக்குதடி வையகம் வெளிக்குதடி !
ஒன்றே தேவன் உலகிற்கு ஒரு வெளிச்சம் !
உத்தமர் பெயரை உச்சரி தினமே.. !
காங்கேசன் கடல் நுரையோடி !
கறுத்த மச்சான் கள்ளச் சிரிப்போடி !
செல்லமாய்ச் சிரி செவத்தப் பெண்ணே !
செவத்தப் பச்சை சேர்ந்திடிப்போம் !
விருந்துக்கு வறுத்த பயறு !
கொழுத்த கொழுக்கட்டை பிடித்தெடு !
காகம் கரையுது !
கட்டுவன் களி மண்ணிலொரு அடுப்புப் பிடி !
விருந்து வருகுது பகை ஓடுது.. !
தோட்டம் திருத்தியது நாமடி அதில் !
நோட்டம் விடுவது யாரடி? !
உந்த மண்ணில் உறைப்பது எங்கள் வேர்வையடி !
எந்த மனிதன் பறிப்பான் எங்கள் சோற்றை? !
கறுத்த மச்சான் கள்ளச் சிரிப்போடி !
நாளை சரித்திரச் சாட்ச்சிகளடி நாம். !
--------------------------- !
ஆசிரியர் கண்ணப்பு நடராஜ் !
தொகுப்பு: வாழுகின்ற வாலிபங்கள்
கண்ணப்பு நடராஜ்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.