மாய ஒளிசிதறும் திசை நோக்கி - எம்.ரிஷான் ஷெரீப்

Photo by Freja Saurbrey on Unsplash

ய பயணம்!
-------------------------------------------!
அவளது பிரயாணத்தின் குறுக்கீடான!
அகன்ற வாயிலைத் திறந்தபோது!
சுவாசத்திலடித்தது சாத்தானின் வாடை!
வேட்டை நாயொன்றைப் போலவந்து!
சதைகள் கவ்வமுயன்ற பொழுது!
வேடிக்கை காட்டித் !
தப்பிக்கத் தெரியவில்லை அவளுக்கு!
தூக்கிப் போட்டு இரை நோக்கவைக்க!
இறைச்சித் துண்டுகளும் கைவசம் இல்லை!
அவளுடல் பாகங்கள் குறித்தே!
சாத்தானுக்குக் குறியிருந்தது!
சூழச் சூழ வந்து அவளைத்!
தொட்டணைத்துத் தன் !
பற்தடங்களைப் பதிக்கமுயன்றகணம்!
தேவதூதனொருவனின் மெல்லிறகுக் காற்று!
இருவருக்குமிடையே ஓர் அணையை எழுப்பிற்று!
மாயக்கரமொன்று அவளதிர்ந்த நெஞ்சை !
ஆறுதல்படுத்தி விழிநீர் துடைத்திற்று!
கீறல்கள் மட்டும் சுமந்து!
எப்படியோ சாத்தானைக் கூண்டொன்றிலடைத்திட்டாள்!
எம்பி எம்பியது அவளிடம் வர!
முயற்சித்தபடியேயிருக்க!
அவளது பயணம் தேவதூதனை நோக்கித்!
திசைமாறிற்று!
இன்று !
தூரத்து ஒளியொன்று பார்வையில் இடறிட!
நெடுஞ்சோலைகள் தாண்டிப்!
பசும்வெளிகள் தாண்டி!
வற்றாத அழகிய நீர்வீழ்ச்சிகள் தாண்டி!
நிலவற்ற நடுநிசிகளில் கூட!
அவனது மெல்லிறகுகள் கொண்ட !
அருட்கரங்களைத் தேடியே!
அவள் பாதங்கள் தொலைந்தபடியிருக்க!
அணையெழுப்பிய மெல்லிறகுக் காற்றே!
நீயறியாயோ வெந்துருகும் அவள் சுடுமூச்சை ?!
விழிநீரழித்த மாயக்கரமே!
நீயறியாயோ பிரவகிக்கும் !
அவள் துயரங்களின் மூர்க்கத்தை ?!
-எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை
எம்.ரிஷான் ஷெரீப்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.