பேய் மழை - எம்.ரிஷான் ஷெரீப்

Photo by engin akyurt on Unsplash

பேய் மழை ...!!
சட்டென்று வந்த மழை!
சடசடத்துப் பெய்த மழை !!
வற்றிஇவாடி வதங்கி!
வசந்தமிழந்த காலங்களில்!
வாராதிருந்த மழை!
வரவேற்றும் தூறாதிருந்த மழை !!
இப்போது வந்திங்கு!
இடைவிடாது பெய்யும் மழை ;!
இடிமின்னலைக் கூட்டி வந்து - பல!
இதயங்களை நிறுத்தும் மழை !!
கோழிஇகுஞ்சையெல்லாம்!
கொத்தோடு நனைத்த மழை ;!
கொட்ட வந்த தேளைக்கூட!
கொல்லாமல் விட்ட மழை !!
மின்சாரக்கம்பியையெல்லாம் நிலத்தில்!
மிதக்க விட்ட மழை - அதனை!
மிதித்த உயிர்களையெல்லாம்!
மேலோகம் சேர்த்த மழை !!
தொற்று நோயையெல்லாம் - தன்!
தோளில் தூக்கி வந்த மழை !
வற்றிய உடலோடு போய்!
வைத்தியரை வாழவிட்ட மழை !!
மரங்களை முறித்துப்போட்டு!
மண்சரித்து வந்த மழை - பெரு!
விருட்சங்களை விழவைத்து!
வீடழித்துப் பெருத்த மழை !!
அகதியென்ற காரணத்தால்!
சொந்தமிழந்து சொத்திழந்து!
சுகமிழந்து சுவடிழந்து!
சுயமிழந்து வந்த இடத்தில்!
கட்டிய கூடாரத்தினுள்ளும் வெள்ளமாய்க்!
கைவீசி வந்த மழை !
காற்றனுப்பிக் காற்றனுப்பிக் கூரை!
களவாடிப்போன மழை !!
பாதையோரங்களில் !
படுத்துக் குமுறியவரை!
பதறவைத்த மழை ;!
விதியை நொந்தவாறே!
விம்மிக்கிடந்தவரை!
விரட்டியடித்த மழை !!
சட்டென்று வந்துள்ள மழை !
சடசடத்துப் பெய்யும் பேய் மழை...!!
-எம்.ரிஷான் ஷெரீப்!
மாவனல்லை!
இலங்கை
எம்.ரிஷான் ஷெரீப்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.