மனித அறிவின் உச்சம் - சுகுமார் கோ

Photo by Pete Nowicki on Unsplash

காரெனும் காலம் வந்தவுடன்
கருநிற மேகம் வந்துவிடும்
பருவ மழையும் பொழிந்துவிடும்
பெரிய நிலமும் செழித்துவிடும்
பட்டுப் பயிரும் வளர்ந்துவிடும்
காட்டு மரமும் தளிர்த்துவிடும்
வந்த பஞ்சம் பரந்துவிடும்
வனத்தில் விலங்கும் மகிழ்ந்துவிடும்

பருவ காலம் ஆறுண்டு
பரந்த எங்கள் நாட்டினிலே
நிலமோ ஐந்து வகையுண்டு
நீண்ட எங்கள் நாட்டினிலே
அனைத்து வகையில் பயிருண்டு
அழகிய எங்கள் நாட்டினிலே
அத்தனை இயற்கை அழகுண்டு
அந்த காலத்து நாட்டினிலே


அள்ளிக் குடித்த ஆறுமில்லை
துள்ளிக் குதித்த கிணறுமில்லை
இவைகள் எங்கே தெரியவில்லை
ஆள்துளை இல்லா வீடுமில்லை
பழய பெரிய காடில்லை
பழம் பெரும் மரங்களில்லை
இவைகள் எங்கே தெரியவில்லை
மனைகள் விளைவதில் மாற்றமில்லை


வெண்பா பனித்துளி எல்லாமும்
காணா போனது ஏனென்றால்
பசுமை குடிலின் வாயுவெல்லாம்
பெருகி வருகிற காரணம்தான்
பூமி வெப்பமோ உயரியதால்
கடலின் மட்டமும் உயரியதே
மரத்தின் வளமோ குன்றியதால்
மழையின் வளமும் குன்றியதே

மழையின் வளமோ மறைந்ததால்
மண்ணின் வளமும் மறைந்ததே
விண்ணை தினமும் காண்கையில்
விண்மீன் தோன்றி மறைகிறது
உதித்து மறைகிற செங்கதிரும்
இரவில் வருகிற வெண்மதியும்
இவற்றில் ஏதும் மாற்றமில்லை
உன்னில் இத்தனை மாற்றங்கள்


இதற்கு எல்லாம் காரணம்தான்
இங்கு வளர்ந்த பிள்ளைகளே
மனிதன் உன்னை காத்திடுவான்
என்று எண்ணி ஏமார்ந்தாய்
உந்தன் அழிவை அக்கொடியவன்
அறிவின் வளர்ச்சி என்றெல்லாம்

கூறி நடத்திய ஆய்வெல்லாம்
அவனது அழிவில் முடிந்ததாம்
பார்க்க இயலா உயிருக்கு
பெரிய இறையாய் ஆகிவிட்டான்
இதன்பின் வருகிற காலமாவது
இயற்கை அண்ணை வாழவேண்டும்
அவள்தான் உன்னைக் காத்திடுவால்
அந்த பெரிய அழிவிலிருந்து


_ அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சுகுமார் கோ

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.