தோழனின் செவிகளுக்கு - சத்தி சக்திதாசன்

Photo by Tengyart on Unsplash

சக்தி சக்திதாசன் !
!
நினைவுகளைத் தொலைத்து விட்டு !
நிஜவுலகில் தவித்துக் கொண்டு !
கனவுகளைக் கலைத்துக் கொண்டு !
திண்டாடும் என் தோழா ! !
அண்ணாந்து பார்த்து விடு !
அன்றாடம் இரவினிலே !
ஆயிரமாய் நட்சத்திரங்கள் !
ஒளிராமல் தவிர்ப்பதுண்டோ ? !
தானோடி வரும் பாதையில் !
தவித்து நிற்கும் மக்களுக்கு !
தண்ணீர் தர மறப்பதுண்டோ !
தியாகத் தீப நதி !
கண்களின் ஓரங்களில் !
காய்ந்து போன கண்ணீரை !
உறுதியுடன் துடைத்து விடு !
உயர்ந்த தோள்களை நிமிர்த்திடு !
பிச்சை கேட்டு வாங்க எதிர்காலம் !
பிறிதொருவர் சொந்தமல்ல !
தன் காலில் நிற்காத சமுதாயம் !
காலத்தில் வெல்வதில்லை !
சுதந்திரத்தின் விளிம்புவரை !
துடுப்பெடுத்து வந்தவன் நீ !
கரையினிலே மகிழ்ச்சிப்பூ !
கைகளில் எடுக்க ஏன் தயக்கம் ? !
ஏழைகள் என்றொரு வர்க்கமில்லை !
எல்லோரும் மன்னர்கள், பேதமில்லை !
கைகளிலே தீப்பந்தம் எடுத்து !
கருமைதனை எரித்து விடு !
நேற்றைய கருத்துக்களை மனதில் !
இன்றும் புதைத்துக் கொண்டு !
நாளையை மறுப்போரை ஆருயிர் !
நண்பா ! நீ மிதித்து விடு !
குழந்தைகளின் பசிக்குரல் கேட்க !
கன்னியரின் அழுகுரல் இசைக்க !
பெற்றவரின் மனக்குரல் ஏங்க !
பொன்னான உலகம் என பொய்யாக ஏன் ? !
கரங்களில் ஆயுதம் தேவையில்லை !
கருத்துக்குள் கனல் மூண்டால் போதும் !
கைகளை வலுவாக்கி, காலத்தை கயிறாக்கி !
புதுக்கதை படைத்திடுவாய் என் தோழா நீ
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.