வாழ்தலை மறந்த கதை! - சமீலா யூசுப் அலி, மாவனல்லை

Photo by Steve Johnson on Unsplash

அவளிடம் சொன்னேன்!
அடுப்படி தாண்டு!
பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக!
விஷயங்கள் இருக்கின்றன!
வா உன் சொந்தக்கால் கொண்டு பூமிப்பந்து சுற்றும்!
வித்தை சொல்லித் தருகிறேன் !
அவள் வந்தாள்.!
சுமக்க முடியாத சங்கிலிகளையும்!
முடிவற்ற சந்தேகங்களையும்!
சுமந்து கொண்டு !
மிகுந்த பிரயாசையோடு!
அவள் சங்கிலிகளை ஒவ்வொன்றாய் களைந்தேன்!
சந்தேகங்கள் முடிவுறாது ஒடும் நதியை ஒத்தனவாய்!
நீண்டு நெடித்தலைந்தன. !
இனி என்ன!
களைப்போடு கேட்டாள்.!
இனி நீ வாழத் துவங்கு !
வாழ்தல் என்றால்!
அயர்வோடு நோக்கினேன்.!
அவள்!
வாழ்தலை மறந்து வெகுநாட்களாகி விட்டிருந்தன
சமீலா யூசுப் அலி, மாவனல்லை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.