கவிஞனின் மனைவி ! - சமீலா யூசுப் அலி, மாவனல்லை

Photo by Joel Filipe on Unsplash

அபூர்வமான சொற்களைப் பின்னும்!
பொன்னிற சிலந்தி அவன் !
ஆறும் தேநீரை மறந்து இரவிரவாய்!
நூற்காடுகளுக்குள் மல்லாந்து கிடப்பான். !
திடும் மென அவள் தாகித்தெழும் நடுநிசி பொழுதுகளில்!
அவன் விரல்கள் தாளில் முளைத்துக்கிடப்பதைப்!
பார்த்தவாறே உறங்கிப்போவாள். !
அவன் எழுதும் எதையும்!
அவள் வாசித்ததில்லை!
அவனது விசாரங்களும் தனித்துவமான!
சிந்தனைகளும்!
அவளுக்குப் புரிந்ததேயில்லை.!
அதிகம் பேசுவது அவனை!
ஆத்திரமூட்டும்.!
அவள் மொழி மறந்தவள் ஆயினள். !
கிராமத்துக்கிளி மொழிகள்!
மட்டுமே தெரிந்த அவள் அந்த நாலுசுவர் கூட்டுக்குள்!
அடங்கியிருந்தாள். !
சமைப்பதும்,துவைப்பதுமாய் அவள் துருப்பிடித்து !
சாகத் தொடங்கிய ஒரு பொழுதில்!
அந்த ‘அதிசயம்’ நிகழ்ந்தது. !
புழுங்கிய சமையலறையில்!
நெடுங்காலமாய் திறவாதிருந்த!
‘ஜன்னல்’ தான் அது !
அதனூடே அவள்!
அடர் காட்டு மூங்கிலின் பாடலையும்!
வானவில் எழுதும் ஓவியங்களையும்!
வாசிக்கத் தொடங்கினாள். !
சமீலா யூசுப் அலி, மாவனல்லை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.