நிறம் - சேரன்

Photo by joel protasio on Unsplash

பனி படர்ந்து உலர்ந்த பாதையில் எப்போதும் போல !
மங்கிய ஒளி தரும் தெருவிளக்கின் கீழ் குளிரில் !
விறைத்துச் சிவந்த மூக்கு நுனியும் கிழிந்து துவழும்!
மேல் மேலாடையும் அதன் மேல் அசிரத்தையுடன் ஒட்டப் !
பட்டிருந்த ஒரு சிறு கனடியத் தேசியக் கொடியும் அடர்ந்த !
நீண்ட பழுப்புத் தாடியில் நு£ற்றாண்டுகளாய்ச் சேர்ந்த !
அழுக்கும் கறையும் உறைந்த பியர் நுரையின் படிவும் !
தலையில் மழை பனி புயல் வெயில் எல்லாவற்றிலும்!
அடிபட்டுத் தோற்றம் சிதைந்த காட்டுப்பச்சை இராணுவத் !
தொப்பியும் !
கூனல் முதுகும் வளைந்த நகங்களும் நீண்டு நெளிந்து !
சிக்குண்ட மயிரும் எனச் சுருண்டு கிடந்து பாதி இருளும் !
பாதி வெறியுமாய் அடிக்கடி திறந்து மூடும் நீலக் !
கண்களுடன் கால் பணம் கேட்டு இரப்பவன் சில்லறை !
எறிபவர்க்கு நன்றி என்கிறான் !
எறிய மறுத்தேன் !
' Fuck you, Paki !
என்று முகத்தைத் திருப்பினான். !
-- சேரன் !
மீண்டும் கடலுக்கு தொகுப்பிலிருந்து !
வெளியீடு: காலச்சுவடு !
தொடர்புகட்கு : kalachuvadu@sancharnet.in !
91-4652-278525
சேரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.