அத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல் - அத்திவெட்டி ஜோதிபாரதி

Photo by Jr Korpa on Unsplash

அத்திவெட்டி ஜோதிபாரதி !
போகியில் தீயன போகி!
யோகமும் போகமும் பொங்க!
இல்லம் புதுப்பிப்பு!
இரவல் பொருள் திருப்பி ஒப்படைப்பு!
வசதிக்காரர் வீட்டில்!
வண்ண வண்ண சாயங்களும்!
வகை வகையான பொருட்களும்!
நடுத்தர குடும்பம்!
நமக்கு வெள்ளை மட்டும் தான்!
நகை போதும் புன்னகை!
ஏழை மக்கள்!
ஏங்கி மொழுகினார் சாணத்தால்!
ஏற்றம் வரும் என நம்பி!
மதுக்கூர் சந்தையிலே!
மஞ்சள் கொத்து,!
வாழைத்தார்கள்!
வகைவகையாய்!
செங்கரும்பு வாங்கி!
செழிக்க வைப்போம் -நம்!
செவ்வேர் விவசாயியை!
வறுத்தெடுக்க வாளை மீனும்!
வகை வகையாய் காய்கறியும்!
வண்ண வண்ண கொம்புச்சாயம்!
வசீகரிக்கும் நெத்திசுட்டி!
சின்ன சின்ன இதழ் தொடுத்த!
சிங்கார மாட்டு மாலை!
தேடித் தேடி வாங்கி வந்து!
தேக்கி வைத்த நன்றிதனை!
தெவிட்ட தெவிட்ட தந்திடுவோம்!
அதிகாலை பொங்கலன்று விழித்து!
வீட்டை சுத்தம் செய்து கழுவி!
விதவிதமாய் கோலங்களால் தழுவி!
மங்கையர்கள் மகிழ்ந்து மகிழ்ந்து உலவி!
மற்றவர்கள் இல்லங்களில் போய்!
மகிழ்ந்து மகிழ்ந்து!
கோலங்களைப் பார்ப்பர்!
கூடிப் பேசி குதூகளிப்பர்.!
சரியான நேரத்தில்!
சரமாக கோடு திறந்து!
தளமேடை அமைத்து!
சாணத்திலே அருகம்புல் பிள்ளையார்!
கிழக்குப்பக்கம் பார்க்கவைத்து!
வாழைப்பழ சீப்பும், செங்கரும்பும், மஞ்சள் கொத்தும்!
வழமை போல் சர்க்கரைப்பொங்கல் வெற்றுப்பொங்கல்!
பொங்கி வரும் நேரந்தனில்!
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலே பொலிக!!!
பொங்கலே பொலிக!! -என்று!
கூவிக் கூவிக் குதூகளிப்போம்!
பொங்கிய பொங்கலுக்கு!
மஞ்சள் கொத்தால்!
மாலையிட்டு!
ஞாயிறு தொழுது குடும்பத்தோடு!
நன்றிக்கடன் தீர்த்துவைப்போம்.!
ஆண்டிற்கு ஒருமுறை!
அறுதியிட்டு கூறாட்டால்!
அதனையும் மறந்து விடுவோமோ?!
மறுநாள் மாட்டுப்பொங்கல்!
மகிழ்வுடனே எதிர்பார்த்து!
வருடமெலாம் திங்கும் வைக்கோலுக்கு!
வசதியாய் விடைகொடுக்க!
வந்தது பொங்கலென்று!
வாரி வாரி அறுத்திடுவோம்!
வயல்களிலே வளர்ந்த புல்லை!
காலையிலிருந்து கால்நடைகளிடம்!
கனிவுடனே நடந்துகொள்வோம்!
களத்துமேட்டிலே நற்ப் புல்!
கண்ட இடம் மேய்த்து!
கானோடை ஓடை செவந்தான்,!
சாமந்தி பிச்சினி ஒடப்பா!
திரிகுளம் வீரையன்குளம் வன்னார்குளம்!
தண்ணீர் காட்டி குளிப்பாட்டி!
வீட்டுக்கு ஓட்டிவரும் முன்னே!
செங்கல் மாவில் கோலமிட்டு!
மங்கையர்கள்!
மகிழ்வுடனே காத்திருப்பார் வரவேற்க!
குங்குமமும் இட்டிடுவார்!
கோலமிடும் பொற்ச்செல்வி!
சங்கதனைக் கட்டிடுவார்!
சரஞ்சரமாய் வண்ண மாலையும் இட்டு!
செதுக்கப்பட்ட கூரிய!
கொம்புக்கு வண்ணம் தீட்டி!
பெரியவன் வைரவன் வனத்தில் பெற்ற!
ஈச்சை மட்டை கசங்கை!
மெல்லிய சுத்தியால் இழைத்து!
மாவிலை வேப்பிலை பெரண்டை!
ஆவாரம்பூ கன்னிப்பூ நெல்லிக்கொத்து!
மாலையாய் தொடுத்து ஒற்றைப்படையில்!
மகிழ்வுடனே மாட்டுக்கு மாலையிட்டு!
பொங்கிய பொங்கலை ஊட்ட!
தண்ணீர் நல்லெண்ணெய் அரப்பிட்டு!
தண்ணீரிட்டு கழுவி!
பொங்கலூட்டி வாய் கழுவி!
தாரை தப்பட்டையோடு!
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலோ பொங்கல்!!!
பொங்கலே பொலிக!!
பொங்கலே பொலிக!! -என்று!
போற்றிடுவோம் மாடுகளை என்றும்...!
திட்டியதை சுற்றியும் போட்டு!
மாட்டை தாண்டவிட்டு!
கட்டிடுவோம் புது அச்சில்!
கொட்டிடுவோம் புல்லதனை!
தெவிட்ட தெவிட்ட!
பசியறியா விரதம் இன்று!
விருந்தினரை உபசரித்து -பின்!
பசியாறி விருந்தோம்பல் போற்றிடுவோம்!
கண்ணுப் பொங்கலை!
காணும்பொங்கலாய்!
கன்னிப் பொங்கலாய்!
கவின்மிகு கலைநிகழ்ச்சிகளும்!
களித்திடுவோம் பிள்ளைகள் விளையாடக் கண்டு!
காத்திடுவோம் தமிழர் பண்பாடு என்றும்
அத்திவெட்டி ஜோதிபாரதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.