தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பெண்

வினி
பிறந்தும் பிறக்கிறது வேறுபாடு
கால கெடுவாக பள்ளி படிப்பும்,
கல்லூரி படிப்பும்

பெற்றோரால் பிரிக்கப்பட்டு
கணவனால் சிறை பிடிக்கப்பட்டு

கனவாக வாழ்க்கை கடக்க
மீண்டும் பிறந்தால் அழகு மங்கை
அவளுக்கு....

நட்சத்திரம்

ச .மௌனிஷண்முகம்
இரவில் தொலைந்த நட்சத்திரத்தை
தேடிக்கொண்டே இருக்கிறேன்
பகலில் வரும் என்று ...

கடவுள்

ச .மௌனிஷண்முகம்
கடவுளை வெறுப்பவனுக்கு
முருகன் என்று பெயர்...
- - - - - - - - - - -
கடவுளை தேடி களைத்து போனான் பக்தன்
கடவுள் காட்சியளிக்கிறார்
ஐயா தர்மம் பண்ணுங்கள் என்று...
- - - - - - - - - - - -
சிறப்பு வலி பிரசாதத்திற்கு மட்டும் அல்ல
கடவுளை பார்ப்பதற்கும் தான்
- - - - - - - - - - - -
காத்திருக்கும் கடவுள்
நேரம் தவறிய பூசாரி
தண்டணை ஆயிரம்
பக்தர்களின் வருகை

அன்பு

கவிரோஜா
விழிகளை மூடினாள் விஸ்வரூபமாய்..
மனதுக்குள் மானசீகமாய்..
நினைத்து நினைத்து மகிழ்கிறேன்..
எங்கும் நிறைந்த்திருக்கும் கடவுளை போல..
எனக்குள் நிறைந்திருக்கும் நம் காதலை.

காலத்தின் போர்வை!

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
வேகம் குறைந்த!
காற்றின் வெப்பம்!
உஷ்ணம் அருந்தி பயணப்படுகிறது!
ஒன்றுமே இல்லாத ஒன்றின்!
உந்துதல்!
நம்பிக்கை மீதான!
எதிர்பார்ப்பை விதைக்கிறது!
உறங்காத உலகத்தின்!
உறங்கும் மனிதர்களில்!
அநேகருக்கு நிம்மதி!
இதயத்திலில்லை ...!
வெறும் சமாதனச்சிரிப்பில்!
காலம் நகர்த்தும்!
மண்புழு வாழ்க்கை!
இவர்களில் யாரும் சந்தோஷமாக இல்லை!
காலத்தின் போர்வைக்குள்!
ஒரு போர்க் குற்றவாளியாக!
இன்னும் எதற்காக!
இவர்களின்...ஜீவித நீடிப்பு

ஏன் எம் இனத்திற்க்கு மட்டும் இவ்வளவு பிரச்சனைகள்?

பிரான்சிஸ் சைமன்
மற்ற இனத்தை!
சற்று கூர்ந்து நோக்கினேன்!
எல்லாம் சரியாகவே!
நடந்த கொண்டிரிந்தது !
இறைவனால் ஒதுக்கப்பட்டு!
கறுப்பு சாயம் பூசப்பட்டோம் என்று!
ஒருவன் பறைசாற்றினான்!
பாம்பை விட மிகவிம் நஞ்ஞுடைய ஜந்து!
என்று இன்னொறுவல் கூவினால்!
எங்களுடன் வம்புக்கு வர்ரதே!
உன் ரத்தத்தை ருசி பார்ப்போம் என்று!
மற்றொருவன் மிரட்டினான்!
மீட்பராக வந்தவர்களோ!
ஒடுக்கப்பட்டனர்!
கேட்க கூட நாதியில்லமாள்!
காலத் தேவனுக்கு பலியாகி கொண்டிருக்கிறார்கள்!
இதையெல்லாம் கேட்க!
எம் இனத்த்ற்கு தலைவன் இல்லை!
ஆனால் சுயப் பிரகடனத்தில் !
தலைவன் என்ற போர்வையில் நரிகள் பல!!
காகங்கள் !
எங்கள் ஒற்றுமையை ஏளனம் செய்தன!
மாடுகளோ !
கைகட்டி தலையாட்டும் அடிமைத்தனத்தை!
சுட்டிகாட்டி நகைத்தது!
நாய்கள்!
நன்றி கடன் மறந்த இனம்!
என்று குத்திக் காட்டியது!
ஆட்டு மந்தைகளோ எங்கள்!
பகுத்தறிவை உரசிப் பார்த்தது!
இயற்கைக்கு அப்பால் !
இருக்கும் சக்தியிடம்!
“ஏன் எம் இனத்திற்க்கு மட்டும் இவ்வளவு பிரச்சனைகள்?”!
என்று முறையிட்டேன்!
இன்னும் பதில் வந்த பாடில்லை!
ஒரு வேலை நாம் ஒதுக்கப்பட்டு விட்டோமா?

குரல்

செ.இராமதனவந்தினி
வாழ்வின்
விளிம்பில் நிற்கும் போது கூட
ஒரு குரல்
உன்னை ஒடிக் கொண்டே இருக்க
சொல்லும்
அது உன் வீட்டின் மூலையில்
நீ வெகுநாளாய் எதிர்ப்பார்த்த
செடியின் பூவில் இருந்து வரலாம்...
உன்னை சிறிது நேரம்
உற்சாகத்துடன் உபசரிக்க வரும் மழைத்துளியாகக் கூட இருக்கலாம்
மறுத்து போன உன்னை
தட்டி எழுப்பும் சூரியனிடம்
இருந்து வரலாம்
பல காலம் நினைவில்
இல்லாத பாலிய நினைவுகளை தூசி தட்டும் போது கூட வரலாம்
நாளை அற்ற உலகில்
சிரித்து விளையாடும்
மழலையின் தொடுதலில் கூட வரலாம்
பிடித்த புத்தகத்தின் ஒரு வரியில்
இருந்து கூட வரலாம்
சற்றும் எதிர்ப்பாராத அலைபேசி
அழைப்பின்
மறு முனையில் நம்மை நேசிக்கும்
குரலாக இருக்கலாம்.....
எதுவாகவும் இருக்கட்டும்
மீண்டும் உன்னை
வாழ்வில் இணைத்துக் கொள்ள
அரவணைக்கும் அனைத்து
குரல்களும்
ஆராதிக்கப்பட வேண்டியவையே!!!

அவளுக்காக

சென்னை - நவின், இர்வைன்
அவளுக்காக!!
என் இதயத்துடிப்பைச் !
சற்றே நிறுத்திவைத்தேன் !
என்னவள் எந்தன் !
மார்பில் முகம்புதைத்தபோது! !
அவள் தூக்கம் !
கலைந்துவிடக்கூடாதென்பதற்காக! !

தண்ணீர்ப் பஞ்சம்

சென்னை - நவின், இர்வைன்
தண்ணீர்ப் பஞ்சம்!
என்னவளே! !
உன் புருவங்களின் ஓரத்தில் !
பொதிந்து நிற்கும் !
அந்த வியர்வை முத்துக்களைச் !
சற்றே உன் சுண்டுவிரலால் !
சுழற்றிவிடு!!
தண்ணீர்ப் பஞ்சமாவது தீரட்டும் !
இந்தத் தமிழகத்தில்!!

பிறைநிலா

சென்னை - நவின், இர்வைன்
சொந்தமண்ணிலிருந்து!
துரத்தப்பட்ட அகதி!
துடுப்பற்ற பரிசல்!
பிறைநிலா