தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மே தினம்

சத்தி சக்திதாசன்
மே ஒன்று!
உலகெங்கும் முழக்கம் - ஆம்!
உழைப்பாளர் தினம்!
உள்ளத்தில் ஏனோ இலேசாக!
உரசுகின்ர உண்மைகளின்!
உறுத்தல் ஒசையற்று மெளனமாய்!
உண்மைத் தொழிலாளியைப் போல்...!
மேதினியின் ஓட்டம் ஏனோ!
மேதினத்தின் ஓட்டத்திலிருந்து!
மெதுவாக மாற்றம்!
கால்களில் விலங்கோடு!
கப்பலில் ஏற்றப்பட்டு !
கடல்கடந்து!
கடத்தி விடப்பட்ட குற்றவாளிகளால்!
கட்டப்பட்டதாம் அவுஸ்திரேலியா.....!
கேட்டிருக்கிறோம் சரித்திரத்தில் - ஆனால்!
கேட்கவில்லை ஆதிமனிதன் குரல்!
அவனியில் மேதினத்தில் !
இந்தியத் தோட்டத்தொழிலாளர்களினால்!
இலங்கையின் பொருளாதாரம் கட்டப்பட்டதாம்!
இழந்தபோது வாக்குரிமையை அத்தொழிலாளன்!
இயலாமை ஒன்றே கொண்டிருந்தான்!
இன்று ஏனோ !
!
-சக்தி சக்திதாசன்

கூடு விற்ற பறவை

ஒளியவன்
இருபது ஆண்டுகளாக!
இந்த வீடும் என் அங்கம்.!
நிலத்தடி உப்பு!
நீரில் பெயர்ந்துவிடும் சில!
சுண்ணாம்பைப் பார்க்கும்போது!
சோகம் தொற்றிக்கொள்ளும்!
எனது கண்களில்.!
இந்த நிலத்தடி நீர்!
இப்படி உப்பாய்ப்போனது!
ஒரு வேளை நான்!
ஓயாமல் சிந்திய!
வியர்வைத் துளியாலிருக்கும்.!
செங்கலின் சிவப்புகளில்!
சின்னச் சின்னதாய்!
சிந்திய குருதி கலந்திருக்கும்.!
தோட்டத்தின் பச்சையில்!
தினம்தோறும் தவறாது!
நான் ஊற்றிய அடிகுழாய்!
நீர் கலந்தே இருக்கும்.!
மெத்தை சுகத்தை விட!
மெருகேறிய இந்தத்!
தரையில்தான் எனது!
தினசரித் தூக்கம்.!
அங்குலம் அங்குலமாக!
அங்கமெங்கும் கலந்துபோன!
வீட்டை விற்றுவிட்டு!
வீறுநடை போட்டுச்!
செல்கிறேன் எனது!
சொந்த ஊருக்கு.!
இந்த வீடும்!
இப்பொழுது புகுந்தவிட்டில்!
இருக்கும் என் ஒரே மகளும்!
இனி புதிய கைகளில்!
இன்பமாய் இருந்தாலே போதும்.!
- ஒளியவன்!
பாஸ்கர்

உயிர்த்து எழு.. அழைக்கும்.. அழகு

சின்னு (சிவப்பிரகாசம்)
உயிர்த்து எழு.. அழைக்கும் அழகு.. அழகுச் சிலை!
01.!
உயிர்த்து எழு!
------------------!
சிறு நாடி ஓடாத!
சிலை தானே என்றாலும்!
குறை நாடி காணாத!
குறுங்காலன் என் மனதில்!
கொடி போல படர்ந்தாயே!
விளையாட விண்ணை நாடி!
விண்மீனில் உனைத் தேடி!
கனவுகளில் கரம் பிடித்து!
காலடியில் உன் நிழல் தேடும்!
காதலினால் சொல்கிறேன்!
நெடு வாயும் கொடு வாயும்!
கோமகளின் சிறு வாயில்!
குறை ஏதும் காணாது!
சிறு இடையில் குறை காண!
முயன்றும் முடியாது அடங்கியதால்!
உனைத் தேடும் கூட்டம்!
இல்லாது போனதா இங்கு!
கோல் நாடிய கரமும்!
குடை நாடிய சிகையும்!
ஒளி நாடிய முகமும்!
உனை நாடிய மனதை!
வா என்று சொல்லாது!
அசையாமல் நின்றாலும்!
அமைதியாய் போக!
என் மனம் மறுக்கிறது!
கோடையிலும்!
அந்தி மாலையிலும்!
யாருக்காய் நிற்கிறாய்!
ஆண்டாண்டு காலமாய்!
கோ மகன்கள் இன்று இல்லை!
கோ மகளே உனை மணக்க!
இரண்டு மணம் புரிந்து விட்ட!
திருமுருகன் பூவுலகில் இல்லை!
சிலையான செம்பொண்னே!
எனை உயிர்பிக்க!
நீ உயிர்த்து எழு!
!
02.!
அழைக்கும் அழகு!
------------------------!
மதிய நேரத்தில் - அவள்!
மயக்கும் விழிகள்!
நினைவு வர!
தயக்கம் தடுத்தாலும்!
மயக்கம் தொடுத்ததால்!
கைபேசி மூலம் - அவள்!
பொன்மொழி கேட்க!
கைபேசி அழைத்தேன்!
அவள் வாய்மொழி கேட்க!
வாய்ப்பு கிடைக்கவில்லை!
அழைத்த அழைப்புக்கு!
அவள் விடையும் கிடைக்கவில்லை!
கோபத்தில் கொதிக்கும்!
வெறுத்த உள்ளம்!
மதிய வேளையில்!
மீதி வேளைக்கு!
விடுமுறை கொடுத்து!
இல்லம் ஓடினேன் .!
அவளை வாய்மொழி மூலம்!
வறுத்து எடுக்க!
இல்லம் புகுந்து!
அவள் முகம் தேடி!
உறங்கும் அவளை!
ஒற்றன் போல் நோக்கிட!
சாம்பல் நிற தாமரை!
உறங்கும் அழகுச் சிலை!
என் சத்தத்தில் எழுந்து!
இரு கை தூக்கி!
சோம்பல் முறிக்க!
கோபம் மறைந்து!
அவள் கோலம் அழைக்க!
விடியலில் துவங்கிய - அவள்!
உறங்கும் இரவை!
மதியத்தில் முடித்து!
உறக்கம் தொலைத்த!
நேற்றைய இரவின்!
இன்றைய தொடக்கத்தை!
துவங்கினேன்!
அவள் அழகில் மயங்கி !
!
03.!
அழகுச் சிலை!
---------------------!
அழகுச் சிலை ஒன்று!
அணிகள் பல கொண்டு!
ஒளியில் நிழல் கண்டு!
உலாவும் காட்சி கண்டீரோ!
இலக்கிய நடை அறிந்தோன்!
உரைக்கக் கேட்டு!
செதுக்கிய சிலையோ இது!
சித்திரைச் சாவடியில்!
சிலிர்க்கும் அழகியிணை!
காணக் குளிருதே கண்கள்!
இயக்கம் ஏதுமற்ற!
உலகம் இதுவென்று!
சொல்லத் துடிக்குதே மனம்!
தூறல் தொடங்கியதும்!
தென்றல் ஓடினால்!
நாட்டிய மண்டபம் இது!
நிழல் குடை கண்டவுடன்!
நின்று பார்க்கிறாள்!
அழகுச் சிலை தான் அவள்!
இந்திரனின் சுந்தரிகள்!
இயன்றவரை முயன்றாலும்!
அழகு என்றால் இது!
சுந்தரனின் சொப்பனத்தில் அவள்!
வந்தா செய்தான் இதை!
!
வான் கொண்ட மதி முகத்தை!
மனதில் கொண்டா செய்தான் இதை!
!
மனிதனின் கை படைத்த!
மன்மதச்சிற்பம் இது!
அன்னம் கொண்ட தோள்களில்!
ஆடை செய்யும் நாட்டியம்!
காணக் கண் போதுமோ!
கம்பில் வைத்த கரத்தின்!
அழகை முழுதாய்ச் சொல்ல!
என் ஆயுள் தான் போதுமா!
இயல் இசை நாட்டிய மேடை!
அவள் இடையினை சூழ்ந்துள்ள ஆடை!
தென்றல் பாட!
அசைந்திடும் அவள் மேலாடை!
அழகு என்றால் இது!
கங்கை கொண்டச் சோழபுர!
அழகுச் சிலை தான் இது

வரலாற்று வாசிப்புகள்

இளம்பூரணன் .அர
பள்ளிக்கூடத்தில்!
சிந்து சமவெளி நாகரீகத்தையும் !
ஹரப்பா, மொஹஞ்சதாரோக்களையும்!
வலுவிழந்த உடலோடும்!
வளம் குன்றாத வசீகர குரலோடும்!
வரலாற்றாசிரியர்கள்!
புரிந்துணர்த்திய போது புரியவேயில்லை!
வரலாற்றின் பழம்பெருமைகள்!!
!
மாடுகளோடு மாடாகி!
ஓடிக்கிடக்க வழிகோலிய!
பனைமரங்களடர்ந்த!
முட்கள்மிக்க ஓடையும்....!
!
உயிர் குடிக்கும் உச்சிக் கதிரவனின் உக்கிரத்தில் !
என்!
நா வறண்டிருப்பதை பொருட்படுத்தாமல் !
ஆவினங்களை அழைத்துச் சென்று!
அதன் தாகம் தீர்த்திட எத்தனிக்கையில்!
ஓரமாய் நீர் தேக்கி!
ஈரப் பார்வையுடன் தான் உயிர்த்திருப்பதை!
அறிவித்த குளமும்....!
!
'ம்மா ' என்ற ஒற்றைச் சொல் பாடலின்!
ராக சங்கமத்தில்!
இசையின் மூலத்தை கற்ப்பித்து!
தன் தேவை உணர்த்திய ஆவினங்களின்!
ஆதிக்க பூமியாகிய!
பச்சையாடை கட்டிய புற்சமவெளியும்... !
!
இன்று!
காணாமல் போய்!
நினைவுகளின் ஒவ்வொரு!
நியூரான்களையும்!
செரிக்க செரிக்க!
அரித்துக் கொண்டிருக்கும்!
என்!
இறந்தகால இன்பங்களின்!
நிகழ்கால நிஜங்களை காணும்வரை!!
!
-இளம்பூரணன் .அர!
31/10/2007

மனிதனிடம் இல்லையோ இயற்கை நியதி!

வேதா. இலங்காதிலகம்
ஆடைகள் உரித்து நிர்வாணமாய் சருகுகள் உதிர்த்த மரங்கள்.!
மேடைகளிடா அலங்கார முருகு! அதுவும் வரங்கள். !
மூவாசை துறந்த மனங்களாக, முதிர் ஞானஒளி நிலையாக!
முகவரி காட்டி முக மயக்கி முகிழும் இயற்கை.!
கலையுளமிருந்தால் மரங்களை ரசிக்கலாம், அன்றேல் காத்திருக்கலாம்.!
விலையற்ற காத்திருத்தலில் பூமி தேவியைப் போல!
இலைதுளிர் காலவருகைக்கு, வலையென இலை விரிகைக்கு – தருக்கள்!
இயற்கை நியதியில் வாழும். இவற்றை மறந்த மனிதர்களாக அல்ல.!
பூமி தன்னைத் தானே சுற்றி பகலவனையும் சுற்றும் நியதி!
புரளும் நிலையானால் சர்வநாசம் உலகினில்.
மனைவி கணவனைச் சுற்ற, கணவன் மனைவியைச் சுற்றும்!
பிணைவில் நியதி தவறுவதேன்! இணைவில் தவறு நிகழ்வதேன்!!
செம்புலத்தில் பெய்த நீராக சேர்வதில்லை சிலர் அன்பினால்.!
எண் புலத்தில் வல்லவனாம் மனிதனில் இல்லையோ மரத்தின் நியதி!!
இலை துளிர் காலத்து இலக்கணம் கலைமிளிர் மனிதனிடம் இல்லையே!!
இம் மனிதன் இயற்கையிலும் கீழ் மகன் தானோ?.!

நியாயத்தின் திசை!

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
நியாயத்தின் திசையை!
அவள்!
எப்போதும் திரையிட்டு மறைக்கிறாள்!
தனக்கான திடீர்க் குறுக்குப் பாதையில்!
சுகமாய்ப் பயணிக்கிறாள்!
தன் பலவீனங்களை!
இரும்புக் கவசமிட்டுப் பாதுகாக்கிறாள்!
தன் தவறான முடிவுகளின் மேல்!
அவள்!
மறு பரிசீலனையை!
அனுமதிப்பதேயில்லை!
சங்கடங்களை விரும்பியே!
தோள் சுமந்து போகிறாள்!
பொய்களை அணிகலங்கலாய்!
அணிந்து அணிந்து!
அழகு பார்க்கிறாள்!
இழப்புகளின் முன்!
மௌனமாய் நிற்கிறாள்!
தான் கரைவது அறியாமல்...!
உறவினர்களின் முட்கரங்களோடு!
இனிதே!
கை குலுக்குகிறாள்!
அவள் நாட்கள்!
இப்படியே கழிகின்றன!
நியாயத்தின் திசையைத் திரையிட்ட படி...!

உண்மை

மு.முத்துகுமரன்
உன் இமைகள் வேகமாக படபடக்க !
காரணம் !
பிறர்க்குத் தெரியாமல் களவாடிய !
என் இதய துடிப்போடு !
நீ விளையாடும் விளையாட்டென !
எப்படிச் சொல்லுவாய்! !
எப்போது சொல்லுவாய்!! !
அன்புடன் !
மு.முத்துகுமரன்

செம்மஞ்சள்..தொலைவிலும்..ஒரு பனித் துளி

எம்.ரிஷான் ஷெரீப்
செம்மஞ்சள் பொழுதின் வானம்...!
தொலைவிலும் அருகிலும் மிதக்கும் கடல்...ஒரு பனித் துளி ஈரம் !
01.!
செம்மஞ்சள் பொழுதின் வானம்!
-----------------------------------------!
பூர்வீக வீட்டிலிருந்து சற்றுத் தொலைவுதான் எனினும்!
நடந்தே செல்லத் தலைப்பட்டோம்!
அரூப ஆவிகள் உலவும் தொன்ம பூமியென!
வழி காட்டியவர்கள் சொன்ன கதை கேட்டு அச்சமுற்றாயா!
எத்தனையெத்தனையோ தலைமுறைகளுக்கு ஊணிட்ட!
வேலிகளற்ற தரிசு வயலது!
பரந்து விரிந்த எம் பண்டைய பூமி!
வண்டி கட்டிச் சென்று மூத்தோர் விவசாயம் பார்த்த!
சருகுக் கோரைப் புற்கள் விரவிக் கிடக்கும் பயிர்நிலம்!
என் ஞாபகத்திலொரு பூநெல்லிச் செடியிருக்கிறது!
நிலா இரவுகளில் முற்றத்தில் பாய்விரித்து!
தலைகோதிக் கதை சொன்ன அம்மா நட்ட செடி!
பிஞ்சு விரல்கள் வலிக்க வலிக்க!
மூக்கு நீண்ட பேணியொன்றில் நீரேந்தியூற்றி!
நானதை வளர்த்து வந்தேன்!
அந்நிய நகரத்தில் நீயும் நானும்!
அலங்காரத்துக்காக வைத்திருக்கும் போலிச் செடி போலன்றி!
அது நன்கு தளைத்திருந்தது!
தேசம் விட்டகன்ற நாளில்!
அக் காலத்தில் நிழலுக்கென்று வளர்த்திருக்கக் கூடிய!
கொன்றையும் வேம்பும் இன்ன பிற மரங்களும்!
குளிர்ச்சியைத் தந்திருக்கும்!
கூடவே களைப்பறியாதிருக்க வாய்ப்பாடலும்!
கூட்டுக் கதைகளும் வெற்றிலையும்!
சிறு காயங்களுக்குச் சேற்று மண்ணுமென!
உழுத பின் வாடிக் களைத்த மூத்தவர்கள்!
அங்கமர்ந்து ஓய்வெடுத்திருப்பர்!
இன்று!
சட்டை கழற்றிச் சென்றிருந்ததொரு சர்ப்பம்!
தூர்ந்துபோய் வான் பார்த்திருக்கும் பெருங்கிணறும்!
பல பிரேதங்களைச் சுமந்திருக்கக் கூடும்!
எம் மூதாதையரின் இதிகாச ரேகைகள் பரவிய நிலத்தை!
பாதி விழுங்கிச் செரித்திருக்கின்றது கருவேலங்காடு!
அநேகப் பெருவிருட்சங்கள் மரித்துவிட்டன இப்போது!
வலிய துயர்களைக் கண்டு தளர்ந்து கிடக்கிறது பூமி!
அதன் உடலிலின்னும்!
சுருக்கங்களைத் தீட்டிக் கொண்டேயிருக்கிறது!
கோடை காலத் தூரிகை!
அத்தி மரத்தில் சாய்ந்து நின்றபடி!
அந்திப் பேய் வெயில்!
மஞ்சளாய் ஊடாடிய தரிசு வெளி பார்த்துச் சட்டென!
''வான்கோ'வின் ஓவியமும் குரூர ஆயுதங்களும்!
ஒருங்கே கலந்த நிலம்' என்றாய்!
தங்க பூமியின் ஆகாயத்தில்!
செஞ்சாயம் கலந்தது வேறெப்படியாம்!
!
02.!
தொலைவிலும் அருகிலும் மிதக்கும் கடல்!
-----------------------------------------------------!
துல்லியமான நீர்ப்பரப்பு!
கூழாங்கற்களைப் போர்த்திப் படர்ந்திருக்கிறது!
சலனமற்றிருக்கிறது ஈர நிலத்தின் சயனம்!
போர்வையின் பாசிப் பூக்களும் பசிய அலங்காரங்களும்!
அசைந்தசைந்து!
காற்றின் தாலாட்டுக்களை இசைக்கின்றன மௌனமாய்!
உன் கையிலொரு மதுக் குவளை!
'அதிதிகளாய்ப் பறவைகள் வந்திரையும்!
மா கடலின் மேலேயான வானம் பற்றித் தெளிவாகத் தெரியும்!
சமுத்திரம் பற்றி மட்டும் சொல்' என்றாய்!
'இறுதி மதுவில் கரைந்தழியும் பேரண்டம்'!
வேறென்ன சொல்ல இயலும்!
03.!
ஒரு பனித் துளி ஈரம் !
-------------------------------!
இலைகளை உதிர்த்தழும் விருட்சங்களைத் தடவிக் கொடுத்து!
தாண்டிச் சென்ற கோடையைக் கழுவி!
ஞாபகக் கொடியில் காயப்போட்டாயிற்று உலர்த்தவென !
வெண்சாயங்களில் தோய்த்தெடுத்த இழைகளைக் கொண்டு!
குளிர்காலக் கம்பளிகளை!
பின்னுகிறது காலம் !
அதைப் பிடித்துக் கொண்டு படர்கிறது!
நேற்றைக்கு முந்தைய தினங்களில் துளிர்விட்ட!
சிறு ஒற்றைக் கொடி!
வைசாக தினங்களில் வெண்ணிற ஆடையும் பூக்களுமென !
விகாரைக்கு அணிவகுத்துச் சென்ற பக்தர்கள் !
எறிந்து போன சிறு விதையாக இருக்கலாம் தாவரத்தின் மூலம்!
நிலம் பிளந்து வந்த கொழுந்துக்குப் புதிது!
அலையெனச் சுழலும் காற்றும்!
நிமிரும்போதெல்லாம் !
உற்றுப் பார்த்தவாறிருக்கும் பரந்த ஆகாயமும் !
விசாலமாய் நகரும் பூச்சிகளும் இன்னபிற ஜந்துக்களும்!
இன்னும் !
மிதிக்கக் காத்திருக்கும் மனிதர்களும்!
வரும் காலங்களில்!
அதன் கிளைகளில் வந்தமரும் அணில்கள்!
இன்னும் பிறக்கவேயில்லை!
இலைகளின் மறைவுகளுக்குள் தம் !
கூடுகளைச் செதுக்கக் கூடிய பட்சிகள்!
கண்டங்கள் தாண்டி இன்னும் புலம்பெயரவேயில்லை!
வேர்களை வளப்படுத்தும் புழுக்களும்!
இன்னும் நகரவேயில்லை எனினும் !
எப்போதோ மனிதன் உறிஞ்சியகற்றி விட்டான்!
தாவரங்களுக்கான ஈரத்தை!
மண்ணிலிருந்தும் மனதிலிருந்தும்!
பனிக் கூட்டம் விடியலை!
பேரோசையுடன் பாடும் சொப்பனங்களெல்லாம்!
காடுகளால் நிரம்பி வழிகின்றன!
தீயிடம் யாசகனாக்கும்!
குளிர் காலத்தின் நீள இரவுகளிலும்!
வனங்களைத் தொழுத ஆதிவாசிகளை!
கடவுளிடம் மீளக் கொடுத்துவிட்ட இக் காலத்தில்!
துளிர்த்திடப் போதுமானதாக இருக்கலாம்!
தளிரின் வேருக்கென !
இப் பேரண்டம் தரும்!
ஒரு பனித் துளி ஈரம்

அன்பைத்தேடி

ஆதித்தியன்
ஒரே ஒரு மகன்!
வீட்டைத்தவிர அணைத்தையும் விற்று!
விருப்பப்படியே படிக்கவைத்தோம்…!
!
இன்று…!
வெளியூரில் அவன் பெரிய மருத்துவன்!
உள்ளூரில் நாங்கள் உழைத்துத்தேய்ந்து!
நோயாளிகளாய்…!!
முதல் தேதியில்!
ணம் மட்டும் மணியாடர்!
மூன்று மாத்ததிற்க்கு ஒருமுறை!
மருந்து மாத்திரை பார்சலிலே..!!
நலம்,நலமா?!
உயிரற்ற எழுத்துக்களை உடலில் தாங்கி!
அவ்வப்போது கடிதங்கள் ..!!
அவன்,!
அங்கு நவீன மருத்துவன்!
நாங்கள் இங்கு,!
நாடி மருத்துவனிடம்..!!
!
இறுதி நாட்களை கழிப்போம் மகனிடம்!
என்று நாங்களும் புறப்பட்டோம்!
முறுக்கு வத்தல் வகைகள் அடங்கிய!
கோணிப்பையுடன் குதூகலமாய்…!
வாங்க நலமா?!
என்ன திடீரென?!
இரண்டே வார்த்தைகள்!
எங்கோ கிளம்பினான்.!
நாங்கள்!
உழைத்து தேய்ந்தவர் என்பதனால்!
ஒடிந்தவை தேய்ந்தவை போடும் அறையை!
ஒதுக்கித்தந்தாள் மருமகளும்.!
!
மாலையில் வந்த அன்பு மகன்!
தேவையை மட்டும் சொல்லுங்கள் என!
அறைக்குள்ளேயே சிறைவைத்தான்.!
குடும்பத்துடன் அவர்கள்!
வெளியே செல்கையில்!
காவல் நாய்களாய் நாங்கள் இருவரும்..!!
உணவு உடை எல்லாம் கிடைத்தது!
உண்மை அன்பின் முகவரி கிடைக்கல…!
போலி அன்பின் வெம்மை தாங்காது..!
இதோ…!
புறப்பட்டு விட்டோம்!
கிராமத்தை நோக்கி…!!
!
நாளை என் மகனும்!
அன்பைத்தேடுவான்!
அவன் மகனும்….!
படிக்கிறான் ‘அமெரிக்காவிலே’!! !
!
-கவிஞர் ஆதித்தியன்

கோடை வெய்யில்.. கோடை மழை

பிரதீபா,புதுச்சேரி
கோடை வெய்யில்!
மண்ணில் விழுந்ததால்!
நீயுமா !
மனிதனானாய்!!
ஏமாற்றுகிறாயே !
உன் கானல் நீரால்....!
கோடை மழை!
பூமித் தாயின் !
வறண்ட கன்னங்களை!
வான் முத்தமிட்டதோ!!
ஆதலின் !
ஈரம் தங்கிவிட்டதோ!....!
இருவழிப் பாதை!
இன்றய இருவழிப் !
பாதையை தான்!
அன்றே அனில் மீது!
எங்கள் ராமன் !
வரைந்தானோ!....!
!
-பிரதீபா,புதுச்சேரி