தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இன்றின் கணங்கள்

ராமலக்ஷ்மி
வெளிச்சத்தில் காணநேரும்!
ஒளிச் சிதறல்களோ!
விளக்கு அலங்காரங்களோ!
ஆச்சரியம் அளிப்பதில்லை.!
அற்புத உணர்வைக்!
கொடுப்பதுமில்லை.!
இருளிலேதான் அவை!
உயிர்ப்பாகி ஜொலிப்பாகி!
உயர்வாகத் தெரிகின்றன.!
வாழ்வின் வசந்தகாலத்தில்!
வாசலில் விரிந்துமலர்ந்து!
சிரிக்கின்ற!
வண்ணக் கோலங்கள்!
எண்ணத்தை நிறைப்பதில்லை!
கண்ணுக்கும் விருந்தாவதில்லை.!
பருவங்கள் மாறிமாறி!
வரும் உலகநியதி!
வாழ்வின்மீதான நம்!
பார்வையையும் மாற்றிடத்தான்-!
போன்ற!
சிந்தனைகள் எழுவதில்லை,!
சிற்றறிவுக்கு எட்டுவதில்லை.!
இன்னல் எனும்ஒன்று!
கோடை இடியாகச்!
சாளரத்தில் இறங்குகையிலோ-!
திறக்கின்ற சன்னலின்ஊடாகத்!
திடுமெனப் புகுந்து!
சிலீரெனத் தாக்கும்!
வாடைக் காற்றாக!
வாட்டுகையிலோதான்-!
துடித்துத் துவளுகின்ற!
கொடியாய் மனம்!
பற்றிப் படர்ந்தெழும்!
வழிதேடித் திகைத்து-!
கவனிக்க மறந்த!
இன்றின் சின்ன சின்ன!
சந்தோஷக் கணங்களை!
கவனமாய் உணர்ந்து-!
சிலிர்த்துச் சிறகடித்துப்!
பறக்கிறது வானிலே!!
தவிர்க்க முடியாத!
தவறும் இல்லாத!
இயல்புதானே!
இது வாழ்விலே

வீடுகளால் ஆன இனம்

மாலதி மைத்ரி
ஊரின் அனைத்து வீடுகளும்!
நடப்பட்ட பெண்களென நிற்கின்றன!
சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்!
யாரோ ஒரு ஆணிற்காக!
ஆயுள் முழுவதும் காத்துக் கிடக்கின்றன!
வயதுக்கேற்றபடி தன் உறவுகளுக்காக!
கொலைகாரன் திருடன்!
குடிகாரன் துரோகி மோசடிக்காரன்!
ஊழல் செய்பவன் ஏமாற்றுபவன் விபச்சாரகன்!
கொடுங்கோலன் காமவெறியன்!
சாதிவெறியன் மதவெறியன் இனவெறியன்!
இவர்கள் யாரையும் வீடு கைவிட்டுவிடுவதில்லை!
அவரவருக்கான வீடு எப்போதும் இருக்கிறது!
உடல் தொட்டிலாகவும் மார்பாகவும் இருந்து!
உயிரும் உணவும் அளித்து!
அரவணைத்துப் பாதுகாக்கப்படும் ஆண் பந்தங்கள்!
ஆண்கள்!
வீட்டைப் புணர்வதன் மூலம்!
பூமியை வளர்க்கிறார்கள்!
பெண்களையல்ல!
காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை!
-மாலதி மைத்ரி (காலச்சுவடு இதழ் 47)

அன்னையின் .. ஒலிச்சிகிட்டே

கா.ந.கல்யாணசுந்தரம்
அன்னையின் தபோவனத்தில்.. ஒலிச்சிகிட்டே இருக்கு.....!
01.!
அன்னையின் தபோவனத்தில்!
-----------------------------------------!
ஒரு நீர்த்துளிக்குள் கடல்... !
என்று அறிந்தும் இந்த வாழ்க்கை!
ஒரு மௌனத்தின் பிரவாகம் !
என்பதை யாவரும் அறிந்திலர்! !
இருட்டறைக்குள் உயிர் கொடுத்து !
தவமிருந்து பெற்றெடுத்த தாயுள்ளம் !
ஒரு தபோவனம்! !
வம்ச விருட்சத்தின் நாற்றங்கால்கள்!
இன்றளவும் நாம்தான் என்று பறைசாற்ற.... !
உன்னுள் இன்றளவும் எதை சாதித்தாய் !
என்று மனம் மௌனமாய் கேட்பது !
யாருக்கு தெரியப்போகிறது! !
ஆனால் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது !
இந்த மானுடம் வென்ற மௌன நித்திரை !
மரணமென்று!........!
இனிமேலாவது அன்னையின் தபோவனத்தில் !
ஒரு நிரந்தரப் பணியாளனாய் இரு!!
02.!
ஒலிச்சிகிட்டே இருக்கு.....!
--------------------------------------!
நெனவிருக்குதா பொன்னுத்தாயி !
நீயும் நானும் ஒண்ணா சேந்து !
நாலாவது படிக்கிறப்போ !
களத்துமேட்டுல ஓடிப்பிடிச்சி !
விளையாடும் போது.....!
என்ன மாடு முட்டி கீழ தள்ளுனத!!
கையில கட்டுபோட்டு !
வீட்ல இருந்தப்போ !
ஒன்னோட அம்மாவோட!
என்ன பார்க்க வந்தப்போ....!
'ஒங்க பொண்ணாலதான்!
எம் புள்ள கைய ஓடிச்சிகிட்டான்' !
அப்படின்னு ஆத்தா உன் ஆத்தாகிட்ட !
சண்டை போட்டு அனுப்பிடுச்சி! !
ஆனா....நீ ....எங்கிட்ட சொல்லிட்டுப் போனே...!
நான் விழுந்த எடத்துல !
ஒரு புளியங்கன்னு நட்டுவச்சி தண்ணிவூத்தி!
வளக்கறேன்னு........!
அதுக்கப்பறம் உங்க ஆத்தாவோட !
வேற ஊருக்கு போயிட்ட....!
இப்ப சரியா முப்பத்தஞ்சு வருஷமாச்சி....!
நம்ம ஊர் அங்காளம்மா கோயில்ல !
திருவிழாவுக்கு வந்தப்போ பாத்தேன்...!
நீ நட்டுவச்ச புளியமரம் வளந்து!
பூவும் பிஞ்சியுமா பாக்கறப்போ.....!
உன் நெனப்பு வந்துடுச்சி பொன்னுத்தாயி!!
ஆமா.... பொன்னுத்தாயி! !
இப்ப என் கை நல்லா இருக்கு!!
உன்னோட வேண்டுதல் பலிச்சிடுச்சி!!
ஆனா உன்னோட வாழ்நாள்ள...!
இந்த புளியமரமும் நம்மோட !
கண்ணாமூச்சியும்.....மறக்கமுடியாத !
பாதிப்ப உண்டுபன்னிடிச்சி.....!
அக்கம் பக்கத்துல சொன்னாங்க....!
போன வாரம் நீ உன் புருஷன் கொழந்தையோட !
ஊருக்கு வந்து இந்த புளியமரத்தடியில !
பொங்கல் வச்சி சாமி கும்மிட்டேன்னு.....!
மனசு தாங்காம என் நெஞ்சுலே!
ஒரு கேள்வி மட்டும் திரும்ப திரும்ப !
ஒலிச்சிகிட்டே இருக்கு.....!
என் சாமியே சாமி கும்பிடனுமா?

உனக்கான.. நான் சொறிந்து.. எனது விலா

டீன்கபூர்
01.!
உனக்கான கவிதையின் கால்களும் கைகளும்!
-------------------------------------------------!
குண்டுமணிகளோடு சேர்ந்து எரிகிறது!
மண்.!
உன் கூந்தல்; இழைகள் பொசுங்கி மணக்கின்றன.!
நீயும் உன் காதலும்!
எனக்குள் எரிவதைப்போல.!
உன் ஆத்மாவுக்கு யார்தான் கபனிட்டது..!
உனக்காகவே எனக்குள் !
பொழுது வணங்கியை வளர்த்துக்கொண்டிருக்கின்றேன்.!
உன் கவிதைகளுக்குள்!
நீ பற்றிய கால்களும்!
நீ பற்றிய கைகளும்!
மிகவும் சுவரஸ்யமாக எழுதப்படுகின்றன.!
மண் !
எனது பாதங்களையும் மணக்கச் செய்யும்!
02.!
நான் சொறிந்து காயப்பட்ட நீயும் நானும்!
-----------------------------------------------!
வகுப்பறையில் உன்னை நான் சொறிந்துவிட்டேன்.!
நீ அழுது கொண்டிருந்தாய்!
உன் விழி வழியே ஒரு கங்கையை ஓடவிட்டிருந்தாய்!
உன் உடையில் படிந்திருந்த!
அழுக்குப் பற்றிப் பேசினேன்!
அவை வாழைக் கசறு!
தலையில் தடவும் எண்ணெய்!
எனவும் கண்டேன்!
அதைப் பற்றிப் பேசினேன்!
அறிவுரைத்தேன்.!
உன் நகத்தில் தேங்கிய ஊத்தை பற்றியும்!
உன் பாடப்புத்தகங்களின் கிளிசல்களையும்!
வினவியபோதே!
உனக்கு நான் பயங்கரமாகத் தெரிந்தேன்.!
நீ அழுதுகொண்டிருந்தாய்.!
என்னிடம் நெருங்கிப்பேச தவறி நின்றாய்.!
வாப்பாவின் மறு திருமணமும்!
உம்மாவின் தனித்த அலைவும்!
உன் கண்ணீருக்குள் அழிந்தபோதே!
நானும் உன்போல் காயப்பட்டுவிட்டேன்.!
03.!
எனது விலா எலும்பின் நீ !
--------------------------------!
நீ எனது வளைந்த விலா எலும்பிலிருந்து!
படைக்கப்பட்டிருக்கின்றாய்!
அல்லாஹ் அதை ஆதாரப்படுத்துகின்றான்.!
அந்த உண்மையே !
எனது மன வானமெல்லாம்!
நீ வானவில்லாக வளைந்து கிடக்கின்றாய்!
எனப் பூரிக்கின்றேன்.!
வானவில்லின் வளைவுக்குள்!
சூரியனைப் பார்.!
மிக மகிழ்வாகத் தெரிகிறது.!
மிக அழகாகத் தெரிகிறது.!
!
- டீன்கபூர் - இலங்கை!
14.10.2008

எதிர்பார்ப்பு!.. அஞ்சல்.. .. நேசம்

செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி
எதிர்பார்ப்பு!.. அஞ்சல் அட்டை.. நேசம் !
!
01.!
எதிர்பார்ப்பு!!
-----------------!
அதிக நேரமொன்றும்!
ஆகாதுதான்.!
ஒருதொலைபேசி அழைப்பில்கூட!
உறுதிசெய்து கொள்ளலாம்.!
ஆயினும்,!
எதிர்பாரா ஒரு தருணத்தில்!
நீ !
எடுத்துத்தரப் போகும்!
பிறந்த நாள் பரிசைக்!
காண!
அமைதியாகவே!
வருவேன். !
அநேக எதிர்பார்ப்புகளோடு.!
!
02.!
அஞ்சல் அட்டை!
---------------------!
நாளேடு தொடர்கதைக்கு!
அனுப்பிய ஒன்று.!
நேயர் விருப்பத்திற்கு!
(வானொலியில் பெயர்!)!
அனுப்பிய அத்தனை!
ஆசைகள்.!
நேர்முகத்தேர்வுத் தகவல்கள்!
நிறையவே கொண்டு வந்தவை.!
திரைப்படக் கலைஞர்களிடம்!
புகைப்படம் கேட்டு!
எழுதியவை.!
படித்ததும் கிழிக்கப்பட்ட!
உத்திரகிரியைப் பத்திரிக்கைகள்.!
இப்படி!
எதையெதையோ!
ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது!
அலுவலகக் கடித அலமாரியில்!
அமைதியாய் வீற்றிருந்த - அந்த!
மஞ்சள் நிற அஞ்சல் அட்டை.!
!
03.!
நேசம் !
---------- !
செம்புலப் பெயல் நீர்!
ஈரேழு ஜென்மம் !
ஈருடல் ஓருயிர்!
!
எவற்றிலும் நீ !
எதுவரினும் நீ !
எக்கணமும் நீ!
!
இத்தனையும் பேசி !
இனித்திருந்த நம் நேசம்!
இப்போது இடம்மாறி!
!
என்னவளாய் நீயின்றி !
எவரோடோ நீயொன்றி.!
!
-செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

நாயானவன்

ஜதி
நான்கைந்து நாய்களுக்கு நடுவே!
ஒரு நாயாகவே நானும் பிறந்தேன்!
மற்ற நாய்களைப்போலவே!
முத்தங்கள் பெற்று!
மடிகளிலாடித் !
தாவியபடியே!
நானும் வளர்ந்தேன்!
சொடுக்கொலியென்றால் ஓடிப்போகவும்!
அதட்டுதலென்றால் ஓடிவரவும்!
ஏவினவற்றை எடுத்துவரவும்!
வாக்கிங் போகவும்!
நானும் பழக்கப்படலானேன்!
நாயானவன் நானென்று!
புலரத் தொடங்கியபின்...!
குரைத்துக் குரைத்துக்!
குரைத்துக் குரைத்து...!
பின் கடிக்க முற்பட்டபோதுதான்!
விரட்டி விரட்டியடிக்கப்பட்டேன்...!
பின்னொரு பசிநாளில்!
நன்மதிய நேரத்தில்!
பாதங்கள் தாரொழுக!
எங்கோ ஓடிக்கொண்டேயிருக்கையில்தான்,!
நாயானவன் நான் என்றால் - அது!
நாய்களுக்கெல்லாம் இழுக்கென்று!
எண்ணமிடலானேன்...!
அக்கணத்தில்!
இப்பிறவிப் பயனையடைந்து விட்டதுபோல்!
தெருவோடே வீழ்ந்து!
அவசரமாய் இறந்துபோனேன்!
நாயாயிருக்கும்போதே!
!
20090508

பதுக்கிய அதிர்வுகள்

கொ.மா.கோ.இளங்கோ
யாரும் அறியாமல் !
பதுக்கி வைத்திருக்கிறான் !
அவனுக்கு மட்டுமே விளங்கும் !
அன்பு அதிர்வுகளை !
மிதிவண்டி காதைக்குள் !
நளன் எனக்கொண்டன் !
புறநகர் பள்ளியில் !
பத்தை எட்டிய !
தமயந்தி !
கண்கள் பாய்ச்சி !
கைகள் பறக்கவிட்டு !
காதல் காற்றின் அகம் சுவாசித்து !
இதழ்கள் எச்சில் விழுங்கிய நாட்கள் !
பேருந்தை துரத்தி துரத்தி !
இணைப்பு அறுந்துபோன மிதிவண்டி !
கனவு கண்ட மறுநாள் !
காத்திருக்கும் அவள் !
'கிணிங் ''கிணிங் ' சவாரிக்காக !
தொடர்ந்தனர் !
தொடர்ந்தது !
வசந்தத்திற்கு பின்பு துரத்திய காலம் !
துருவேற்றியது அன்பில் !
காற்றிலா சக்கரத்து நடுவில் !
காய்ந்து கிடககிறானவன் !
யாரும் அறியாமல் !
பதுக்கி வைத்திருக்கிறான் !
அவனுக்கு மட்டுமே விளங்கும் !
அன்பு அதிர்வுகளை !
வண்டி சக்கரத்தில் மிஞ்சியிருக்கும் !
முப்பத்தேழு ஆரங்களுக்குள்

என் அப்பாவின் கனவு இல்லம்

ரஞ்சினிமைந்தன், திருப்பூர்
வாடகை உலகம்!
தந்த வாழ்க்கையில்!
சொந்த வீடு கட்டத்தான்!
விருப்பமுண்டு எல்லோர்க்கும்!
ஆசைதான் துன்பமென்று!
புத்தனது வார்த்தையினை !
அறிந்திருந்தும் கூட!
என் அப்பாவுக்கும் - ஓர் ஆசை!!
குச்சு வீட்டில் ஆரம்பித்த!
தன் வாழ்க்கை பயணத்தை!
ஒரு மச்சு வீட்டில் முடித்திடவே!
அவருள் வைராக்ய ஒளி அலைகள்!
சில லகரம் தேற்றி!
இரண்டு அடுக்கு வீடொன்று!
கட்டி விட்டு கைப்பார்த்தால்!
தேய்ந்து போன ரேகைகள்...!
திருமணம் ஆகிட்ட!
திருநாள் முதல்தொட்டு!
சொந்த மனை கட்டிடவே - அவர்!
செல்லெல்லாம் கனவுகள்!
லட்சியம் எட்டிடவே!
சில லட்சம் வேண்டுமென!
உழைத்தே திரிந்ததால்!
ஓய்ந்துபோன உணர்வுகள்!!
தரையடுக்கு கட்டி!
பூஜை போட்டு முடிக்கையிலே!
கைக்காசு கரைந்து!
செலவு கையை கடிக்கையிலே...!
மாத வட்டிக்கு!
கைமாத்தாய் சிலகாசு...!
மாடிகட்டி முடிக்கையிலே!
அப்பா...கடனாளி ஆயாச்சு!!
இத்தனை கஷ்டத்தில்!
கட்டிய அவ்வீடு...!
அவர் வாழ்வை பேசும் - ஒரு!
சரித்திர பேரேடு!!
மண்ணோடு மண்ணாகி!
இடுகாடு போனாலும்!
மனிதர் விட்டு செல்லும்!
வீடு மட்டும் நம்மோடு!!
அப்பாவோட வீடு!
அடுக்குமாடி வீடு…!
அதை பங்கு போடுவதே - வீணான!
பிள்ளைங்க பாடு!!
அப்பாவின் உணர்வெல்லாம்!
நிதமும் இது சொல்லும்!!
அதற்கெல்லாம் காரணம் - இது!
அவர் கனவு இல்லம்!!!!
!
-ரஞ்சினிமைந்தன்,!
கணக்கம்பாளையம், திருப்பூர்

அத்துமீறல்

நடராஜா முரளிதரன், கனடா
எப்படி மனிதர்களை அளப்பது?!
பல கருவிகளைப் பயன்படுத்தி!
அளக்க முடியும் என்று!
எனது மனைவி கூறுகிறாள்!
அந்தக் கருவிகள்!
அனைத்தையும் பயன்படுத்தி!
அவள் என்னையும்!
அளந்திருப்பாள்!
என்றே எண்ணுகின்றேன்!
அப்படியெனில்!
அவளால்!
எப்படி என்னோடு கூடவே!
வாழ முடிகின்றது!
மனங்களின் நெருக்குவாரத்தில்!
சிக்கியிருக்கும் கழிவுகளை!
அகற்றுவதற்கான!
துவாரங்கள்!
அடைபட்டுக் கிடக்கையில்!
அவற்றினை!
வாயு மூலக்கூறுகளாகக்!
கவர்ச்சிவிசை குறைந்த!
துணிக்கைகளாக!
மாற்றிவிடுவதற்கான!
பிரயத்தனத்தில்!
ஈடுபடுவதாகவே!
என் மீது எனக்கோர்!
சந்தேகம்!
ஆனாலும்!
எனது மனைவி!
என்னை அப்பளுக்கில்லாதவனாகக்!
கருதுவதாகவே!
உள்ளூர உருவகித்துப்!
புளகாங்கிதமடைந்து!
கொள்கின்றேன்!
பகற்பொழுதினில்!
ஐதாக அகண்டவெளிதனில்!
அலைந்து திரிந்த!
அந்தத் துணிக்கைகள்!
இரவானதும்!
தங்கள சுயத்தைக்!
காட்டுதற்காய்!
திமிரெடுத்து நிற்கின்றன!
அவை மனைவி!
மீதான தொந்தரவாக!
எழுந்து!
பின் அந்நியர்!
மீதான அத்துமீறலாக!
மாறி!
இரவின் இருள்!
இன்னுமோர் பயங்கரத்தைக்!
கட்டவிழ்த்துச்!
செல்கிறது

குற்றமிழைத்தவனொருவன்

பியன்காரகே பந்துல ஜயவீர
பேரூந்தில் - ரயிலில்!
முட்டிமோதிப் பயணிக்கையில்,!
பணப்பையினால்!
முச்சக்கரவண்டிக் கூலியைச்!
சுமக்க முடியாமல்!
போகும் வேளையில்,!
'அந்தோ, எங்களிடமும் இருக்குமெனில்!
சைக்கிள் அல்லாத!
ஏதாவதொரு வாகனம்'!
என்றெண்ணி!
பணிவுடன் வேண்டுகோள் எழுப்புவாயோ!
என் ப்ரியத்துக்குரிய பெண்ணே !
அப்பா....!
காரொன்று!
ஏன் எமக்கில்லை?!
மகன் வினவுகையில்...!
காரொன்று ஏனில்லையென்றால் மகனே...!
புத்தகக் குவியலொன்று எம்மிடம் இருப்பதால் என!
சொல்லிக் கொண்டிருக்கிறேன் !
ஒவ்வொரு மாதச் சம்பளத்தின் போதும்!
வருடந்தோறும் வருகின்ற!
புத்தகக் கண்காட்சிகளில்!
சுற்றியலைந்தும்!
நூல்களை வாங்கி!
அடுக்குகளை நிரப்பி!
இரவுகள் முழுதும் உறக்கம் தவிர்த்து!
ஒவ்வொரு ஏடாக எடுத்து!
ஒவ்வொன்றாக வாசித்து!
சுற்றுகிறேன் இச் சிறு தீவு முழுதும்!
நூல்களின் துணையுடன் உலகம் முழுதும் !
பாதங்களினால் நடந்தோ!
அல்லது வாகனமொன்றிலோ!
பயணிக்க முடியாத் தொலைவுகளைப்!
புத்தகங்களினால் கடக்கிறேன்!
ஆனாலும்...!
என் ப்ரியத்துக்குரிய பெண்ணே!!
இனிய குழந்தைகளே!!
நான் அறிவேன்!
குற்றமிழைத்தவனொருவன் நானென்பதை