உயிர்த்து எழு.. அழைக்கும்.. அழகு - சின்னு (சிவப்பிரகாசம்)

Photo by Didssph on Unsplash

உயிர்த்து எழு.. அழைக்கும் அழகு.. அழகுச் சிலை!
01.!
உயிர்த்து எழு!
------------------!
சிறு நாடி ஓடாத!
சிலை தானே என்றாலும்!
குறை நாடி காணாத!
குறுங்காலன் என் மனதில்!
கொடி போல படர்ந்தாயே!
விளையாட விண்ணை நாடி!
விண்மீனில் உனைத் தேடி!
கனவுகளில் கரம் பிடித்து!
காலடியில் உன் நிழல் தேடும்!
காதலினால் சொல்கிறேன்!
நெடு வாயும் கொடு வாயும்!
கோமகளின் சிறு வாயில்!
குறை ஏதும் காணாது!
சிறு இடையில் குறை காண!
முயன்றும் முடியாது அடங்கியதால்!
உனைத் தேடும் கூட்டம்!
இல்லாது போனதா இங்கு!
கோல் நாடிய கரமும்!
குடை நாடிய சிகையும்!
ஒளி நாடிய முகமும்!
உனை நாடிய மனதை!
வா என்று சொல்லாது!
அசையாமல் நின்றாலும்!
அமைதியாய் போக!
என் மனம் மறுக்கிறது!
கோடையிலும்!
அந்தி மாலையிலும்!
யாருக்காய் நிற்கிறாய்!
ஆண்டாண்டு காலமாய்!
கோ மகன்கள் இன்று இல்லை!
கோ மகளே உனை மணக்க!
இரண்டு மணம் புரிந்து விட்ட!
திருமுருகன் பூவுலகில் இல்லை!
சிலையான செம்பொண்னே!
எனை உயிர்பிக்க!
நீ உயிர்த்து எழு!
!
02.!
அழைக்கும் அழகு!
------------------------!
மதிய நேரத்தில் - அவள்!
மயக்கும் விழிகள்!
நினைவு வர!
தயக்கம் தடுத்தாலும்!
மயக்கம் தொடுத்ததால்!
கைபேசி மூலம் - அவள்!
பொன்மொழி கேட்க!
கைபேசி அழைத்தேன்!
அவள் வாய்மொழி கேட்க!
வாய்ப்பு கிடைக்கவில்லை!
அழைத்த அழைப்புக்கு!
அவள் விடையும் கிடைக்கவில்லை!
கோபத்தில் கொதிக்கும்!
வெறுத்த உள்ளம்!
மதிய வேளையில்!
மீதி வேளைக்கு!
விடுமுறை கொடுத்து!
இல்லம் ஓடினேன் .!
அவளை வாய்மொழி மூலம்!
வறுத்து எடுக்க!
இல்லம் புகுந்து!
அவள் முகம் தேடி!
உறங்கும் அவளை!
ஒற்றன் போல் நோக்கிட!
சாம்பல் நிற தாமரை!
உறங்கும் அழகுச் சிலை!
என் சத்தத்தில் எழுந்து!
இரு கை தூக்கி!
சோம்பல் முறிக்க!
கோபம் மறைந்து!
அவள் கோலம் அழைக்க!
விடியலில் துவங்கிய - அவள்!
உறங்கும் இரவை!
மதியத்தில் முடித்து!
உறக்கம் தொலைத்த!
நேற்றைய இரவின்!
இன்றைய தொடக்கத்தை!
துவங்கினேன்!
அவள் அழகில் மயங்கி !
!
03.!
அழகுச் சிலை!
---------------------!
அழகுச் சிலை ஒன்று!
அணிகள் பல கொண்டு!
ஒளியில் நிழல் கண்டு!
உலாவும் காட்சி கண்டீரோ!
இலக்கிய நடை அறிந்தோன்!
உரைக்கக் கேட்டு!
செதுக்கிய சிலையோ இது!
சித்திரைச் சாவடியில்!
சிலிர்க்கும் அழகியிணை!
காணக் குளிருதே கண்கள்!
இயக்கம் ஏதுமற்ற!
உலகம் இதுவென்று!
சொல்லத் துடிக்குதே மனம்!
தூறல் தொடங்கியதும்!
தென்றல் ஓடினால்!
நாட்டிய மண்டபம் இது!
நிழல் குடை கண்டவுடன்!
நின்று பார்க்கிறாள்!
அழகுச் சிலை தான் அவள்!
இந்திரனின் சுந்தரிகள்!
இயன்றவரை முயன்றாலும்!
அழகு என்றால் இது!
சுந்தரனின் சொப்பனத்தில் அவள்!
வந்தா செய்தான் இதை!
!
வான் கொண்ட மதி முகத்தை!
மனதில் கொண்டா செய்தான் இதை!
!
மனிதனின் கை படைத்த!
மன்மதச்சிற்பம் இது!
அன்னம் கொண்ட தோள்களில்!
ஆடை செய்யும் நாட்டியம்!
காணக் கண் போதுமோ!
கம்பில் வைத்த கரத்தின்!
அழகை முழுதாய்ச் சொல்ல!
என் ஆயுள் தான் போதுமா!
இயல் இசை நாட்டிய மேடை!
அவள் இடையினை சூழ்ந்துள்ள ஆடை!
தென்றல் பாட!
அசைந்திடும் அவள் மேலாடை!
அழகு என்றால் இது!
கங்கை கொண்டச் சோழபுர!
அழகுச் சிலை தான் இது
சின்னு (சிவப்பிரகாசம்)

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.