அழிவிலாத் தமிழே, குறுமுனி ஈன்ற!
குழவியே, குன்றா இளமையொடு, ஆழம்நிறை!
மொழியின் இருநூற்று நாற்பத்தே ழெத்தில்!
அழகான 'ழகரத்தில்' திகழ்பவளே.!
ஏடுகளில் ஏற்றம் பெற்றாய் அன்று.!
நாடுபல கடந்தும் உன்னை நாடுவோர்க்கு!
அன்பினைப் பொழியும் தாயாய்க் காத்து,!
இன்புறச் செய்து மகிழ்பவளே.!
மொழியும் போதும், மொழிந்த பின்னும்!
எழில் கூட்டிய உள்ளங்கள் எழுச்சியிலே;!
பாடுபட்டு உழைக்கும் உழவனின் நிலம்!
மிடுக்காய் விளைவது போலன்றோ?!
தாய் வழி வந்த அன்னையே!!
தோய்ந்த தேன்கனிச் சுவையை ஓயாமல்!
உண்ணும் இச்சேய்கள், பார்மொழி இதுவெனப்!
பண்ணுவோம்; வாழ்த்தி வழிநடத்து
வை. அண்ணாஸாமி