என்றிலிருந்து ? - வினோபா

Photo by engin akyurt on Unsplash

கண்களை நான் மொத்தமும் இழந்தது மிகச்சமீபத்தில்தான் !
திடீரென்ற விபத்தொன்றுமல்ல !
படிப்படியான நிகழ்வுதான் !
சோற்றுப்பானையில் நித்தம் பிடிக்கும் !
கரியாய். !
எனக்குச் சரியாக நினைவில்லை !
இன்றுதானென்று சொல்லமுடியாதபடிக்கு !
குன்றியிருக்க வேண்டும் தினம் தினம் !
சிதறியிருந்த பருக்கைகளை !
சரியாய் துடைக்காமல் !
சிறுவன் அடிவாங்கிய போது !
ஆற்றிக் குடித்துவந்த காப்பி !
அடி நாக்கில் கச்கிறது இன்று. !
படித்திருந்தால் அவன் அஞ்சாங்கிளாஸ் !
அதற்கும் முன்னர்தான் துவங்கியிருக்கவேண்டும் !
என் பார்வைக் குறை !
நெருக்கம் அதிகமில்லா ரயில் பயணத்தில் !
ஒவ்வொரு நிருத்தத்தின் போதும் !
சம்பிரதாயத்திற்கேனும் வாங்கிக்குடித்த !
“டீ காபி பாலுக்கு” அஞ்சு ரூபாய் கேட்டு நீட்டிய பிஞ்சுக் கையில் !
சிவப்புக் கோடாய் பால் பாத்திர பாரம் !
மிச்சக்காசை எண்ணின (என்)கண்கள். !
!
அன்றையிலிருந்தா ? !
பட்டாசுக் கம்பெனி தீ விபத்தில் !
பதினஞ்சு குழந்தைகள் வெந்ததிற்கும், !
பம்பாயில் மீட்ட சிறுமிகளுக்கும் சேர்த்து !
உணர்ச்சிகளற்ற இரண்டு ”த்சோ”க்களை மட்டும் உதிர்த்துவிட்டு !
சேனலை மாற்றியபோதும் உணர்ந்தேனில்லை !
நான் முழுக்குருடனென்பதை !
சொச்சமேனும் மீந்து கிடந்த மனிதம் உரைத்தது !
இன்னும் கை சூப்பும் தம்பியை !
இடுப்பில் சுமந்தபடி !
குட்டிப்பாப்பா ஒருத்தி !
கால்சட்டையை பிடித்துச் சொடுக்கி !
கசக்கிப் பிழிகிற தொனியில் !
”சார்....” என்று யாசித்தபோது
வினோபா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.