ஒவ்வொரு முறை ஊருக்குப்!
புறப்படும் போதும்!
வீட்டு வாசலில்!
விட்டு வந்த கையசைப்புகள்..!
பேருந்துப் படியேறியதும்!
வழியனுப்ப வந்தவரிடம்!
புன்னகையோடு !
பரிமாறிக் கொண்ட கையசைப்புகள்..!
புதிதாய் வந்திருந்த!
குழந்தை விடைபெறும் போது!
பறக்கும் முத்தத்தோடு !
அனுப்பி வைத்த கையசைப்புகள்..!
நாம் பிரிந்த போது!
கனத்த நெஞ்சோடு !
கொஞ்சம் கண்ணீரோடு !
காட்டிச் சென்ற கையசைப்புகள்..!
எல்லாம் என்னிடம் ஏதோ!
சொல்ல முயற்சிக்கின்றன..!
அன்பையா பரிவையா!
நட்பையா காதலையா!
அல்லது இவற்றின் கலவையையா?!
எதுவாக இருந்தாலும் சரி!
பிரியும் நேரங்களில்!
நானும் சில கையசைப்புகளை!
காற்றில் விட்டுச் செல்வேன்!
இவற்றில் ஏதாவதொன்றை அவை!
உணர்த்திக் கொண்டிருக்கட்டும்
வீ.கார்த்திகேயன்