பயணம் தொலைத்தல்!
----------------------------!
நிழலாடும் கதவருகில் நெடுநேரம்!
கால்கடுக்க நின்றிருந்தேன்.!
வியாபாரக்கூடை குடைபிடிக்க!
உஷ்ணப் பெருமூச்சுடன்!
வியர்வை பிசுபிசுக்க வந்து நின்றாள்.!
தலைச்சுமை இறக்குகையில்!
இத்தனை நேரமாயென கடிந்து பார்க்க!
சும்மாட்டுத் துணியில் முகம் துடைத்தவாறே!
வெறும் நமட்டுச் சிரிப்பினால் வாயடைத்தாள்.!
வழிநெடுக என் இரவுகூத்தை ரசித்தபடி வந்தாளாம்.!
கலக்கியெடுத்த கடைசி கருவாட்டுத் துண்டை பறிமாறுகையில்!
உதிர்த்த் கள்ளப்பார்வையில்!
கமகமத்தாள்.!
வெகுதூரப் பயணம்சொல்லி புறப்படுகையில்!
கசிந்துயென் காதருகில்!
விட்டுபோவதற்கா இப்படி காத்திருந்தாயென!
கைபிடித்துழுத்து மடிமீதுயெனை கிடத்திக்கொண்டு!
ஒரு நிமிடம் ஒரு நிமிடமென!
அறைநாளினை கடக்கச் செய்து!
நொடிக்கொரு முத்தமிட்டாள்.!
கைகோர்த்து விழிநோக்கி!
வியர்வைதுளிகள் மிணுமிணுக்க!
இருவரும் விண்மீண்கள் திரியும் வீதியில்!
நிலவின் மடியில்!
பயணம் தொலைத்தோம்
சத்யஜீவா