என் தோட்டத்தில் நீ - வேதா மஹாலஷ்மி

Photo by Tanjir Ahmed Chowdhury on Unsplash

நின்றதும் நடந்ததும் !
இருந்ததும் கிடந்ததுமாய் !
என் தோட்டத்தில் எல்லாமே நீதான்... !
பச்சை இலையின் இடுக்கெல்லாம் !
பாசி படர்ந்த கொடிக்காம்பு - உன் !
இச்சை திறக்கும் இடுக்கெல்லாம் !
உஷ்ணம் கலக்கும் நரம்பைப்போல்.... !
மிச்சம் வைத்த பூவையெல்லாம் !
உச்சியில் உதிர்க்கும் பூங்கொன்றை, !
இடம்பார்த்து, விதம் பார்த்து.. !
குணம் பார்த்து, மனம் பார்த்து - நீ !
சிரித்து வைக்கும் சிரிப்பைப் போல்..... !
மழை முடிந்த மரக்கிளை.. !
வியர்வை பூக்க விறுவிறுக்க, !
என்னைப் பார்த்து, !
ஒரு பக்கமாய் காலை !
ஊன்றி நிற்கும் உன்னைப் போல்.... !
என் தோட்டத்தில் !
இப்படி எல்லாமே நீதான்... !
நின்ற இடம் இன்னும் !
நிச்சயமாய் அதே வாசம்... !
நடந்த இடம் கொஞ்சம் !
வேதனையை வழித்தெடுக்கும்... !
இருந்த இடம் கண்ணில் !
பத்திரமாய் ஒளி வீசும்... !
கிடந்த இடம் , !
உயிரில் பாதி துளைத்தெடுக்கும்!! !
நின்றதும் நடந்ததும் !
இருந்ததும் கிடந்ததுமாய் !
இங்கு எல்லாமே நீயேதான்... !
மனதில் நின்றதும் மாலை நடந்ததும் !
அருகில் இருந்ததும் உயிராய் கிடந்ததும்... !
துளைத்ததும் முளைத்ததும் !
பூத்ததும் பூக்க வைத்ததுமாய்... !
என் உலகில் !
இன்று எல்லாமே நீயே தான்!! !
வேதா மஹாலஷ்மி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.