எழுபது ஆண்டுகளாய்
விண்ணில் சுற்றித்
திரிகிறது ஒரு விண்மீன்!
அருந்தவம் பெற்ற
பத்தினியருள் ராமேஸ்வரத்தையும்
இணையுங்கள் ,
பதினொன்றாம் கோளை
பெற்று எடுத்ததற்காக.
நாளுக்கொரு அறிவு
என்று ஆறறிவு
எழுபதாய் வளர்ந்து
நிற்கிறது.
எண்ணத்தில் பல்லாயிரம்
ஏவுகணைகளை சுமந்து
வாழும் ஏசுநாதர்.
நாட்டை நேர்வழி படுத்தும்
எண்ணத்திலா நும் தலை
நடுவே வாகு எடுத்தீர்கள்?
நீர் நடக்கும் இயந்திரமாய்
அடிவைக்கும் போது
இந்தியாவே கொடிகட்டிப்
பறந்தது நும் கற்பனைச் சிறகால்.
தலையில் முண்டாசு ,
முகத்தில் மீசை,
மனதில் மதமும்
விடுத்தது வந்த பாரதியின்
மறுபிறப்போ?
நீர் சோதனை செய்ய
பொக்ரான் மட்டுமே
போதுமானதா?
அல்ல..
இந்திய மனங்களில்
வேதனை கொண்ட
மனங்கள் காத்திருக்கின்றன,
உம் சோதனைக்காக.
குழந்தைகளின் மனங்களில்
குறையாத மகிழ்ச்சி நீ.
இளைஞர்களின் இமைகளில்
இமைக்காத கருமணி நீ.
முதியவர்களின் உள்ளங்களில்
முளையாத முயற்சி நாற்று நீ.
தமிழைத் தலைத் திருப்ப
வைத்த தலைமகனே.
எங்களுக்கு முன்னோடியான
இந்தியாவின் குடிமகனே.
எங்கிருந்து திரட்டினாய்?
இவ்வளவு ரசிகர் மன்றங்களை?
நீ பிறந்த நாளன்று
சூரியனும் ச்தம்பிதிருப்பான்,
நம் கண்ணில் ஊசி ஏவ
ஒரு விண்மீன் பிறக்கிறதே என்று.
அன்று நீ படித்தை
திருச்சி ஜோசப் கல்லூரியில்
இன்று கல்லூரியே உன்னை
படிக்கிறது ,
புத்தகத்தில் பாடமாய்.
கர்ணன் கவசகுண்டலதுடன்
பிறந்தாற்போல் நீ
ஏவுகணையின் தாரக
மந்திரத்தை மனதிற்கொண்டு
பிறந்தாயோ?
வருடத்தில் ஓர் நாள்
நானும் ஆகிறேன்
அப்துல் கலாமாய்,
தீபாவளி இராக்கெட்டுகளை
விண்ணில் பறக்க விடும்போது.
நீர் சொன்னாற்போல் தான்
காணுகிறேன்.
என் கனவை,
உம் கண்களில்

வாணிகல்கி வனிதா