போராளிகளை இழந்த துயர்ப் பொழுதில் எங்களுக்கு ஆறுதலான கலைஞருக்கு நன்றி.!
கலைஞருக்கு வாழ்த்து!
-வ.ஐ.ச.ஜெயபாலன்!
காலத்தில் சோழனுக்கு!
நீர் ஏந்திக் கல்லணை!
நிழலேந்திக் கோவில்.!
சேரனுக்கோ !
சிலம்பேந்தி வந்த தமிழிச்சி.!
பாண்டடியற்கோ சங்கம்.!
அடையா நெடுங்கதவும்!
ஆஞ்சல் எனும் சொல்லுமாய்!
எம் புகலான தமிழகத்தின் தலைவனுக்கு?!
கலைஞா உனக்கு!
காலச் சுவடாக!
விலங்கொடித்தால் ஈழம் இருக்கும்!
ஐயா நீ உலகுள்ள வரை வாழ்வாய் !
!
---------------------------------!
கலைஞருக்கு மனம் கனிந்த நன்றி, ஈழத்தமிழர்கள் போராளிகள் தோற்றுப் போனால் நிச்சயமான இனக்கொலை ஆபத்தை எதிர் நோக்குகிற காலம் இது. தமிழர்களும் வங்காளிகளும் பல்தேசிய இனம் என்கிற வகையில் இந்திரா காந்தி அம்மையார் வங்காளதேசம் விடுதலைப் போரின்போதும் எங்கள் போராட்டதிலும் விசேட நிலைபாடு எடுத்தார். மேற்க்கு வங்கம் இந்தியா நாமிருக்கப் பயமேன் என்று வங்க மக்களும் சி.பி.எம் கட்சியும் பக்க பலமாக நின்றார்கள். இன்று எங்கள் பிரச்சினையில் சி.பி.ஐ எடுத்த மனித நேய நிலையை சிபிஎம் கட்சியும் பின்பற்ற வேண்டும் என வேண்டுகிறேன். தோழர் சீதாராம் எச்சூரி போன்றவர்கள் நிலமையை நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பது நம்பிக்கை தருகிறது. சீனச் சார்பு ஜெவிபி கட்சியினரால் ஒரு பத்திரிகையாலரால் சிலர் பிழையாக வழி நடத்தப் பட்டாலும் சி.பி.எம் ஆதரவுக்கு நாம் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். தமிழகத்தில் நெடுமாறன், வீரமணி, திருமாவளவன், மருத்துவர், வைகோ, கவிஞர் கனிமொழி, கவிஞர் இன்குலாப், டாக்டர் கிருஸ்ணசமி தோழர்கள் மகேந்திரன், நல்லக்கண்ணு, குளத்தூர் மணி போன்றோரின் ஆதரவு இல்லாதிருந்தால் நாம் எப்பவோ தெருத்தெருவாக எரிக்கப் பட்டிருப்போம். மேலும் இலகணேசனும் அண்மையில் எங்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார். ஜெயலலிதா அம்மையாரின் கண்களும் திறக்கும் என ஈழத் தமிழர்கள் காத்திருக்கிறார்கள். கடந்த கால இரு பக்கப் பிழைகள் மற்றும் எங்களது பெரும் தவறு என்பவை இன்று உணரப்பட்டு திருத்தப் படுகிறது. இன்றைக்கு வன்னி இந்து சமுதிரத்தில் வலுத்துவரும் சீனச் சதிக்கு எதிராக இந்தியாவின் உறுதியான ஆதரவாளனாக தன்னை அடையாளம் காட்டி இருக்கிறது. இலங்கை பாகிஸ்தான் பர்மா வழியில் இந்தியாவுக்கு எதிரான துறைமுக தளத்தை சீனாவுக்கு வளங்க முன்வந்துள்ளது. கலைஞர் மனம் வைத்தால் எங்கள் விடுதலையும் இந்தியாவுக்கு தலை கொடுக்கிற தோழமையான இலங்கைத் தமிழர்களது தேசமும் உருவாகும் என்பதில் ஐயமில்லை. எங்களை இனக்கொலை முயற்சியில் இருந்து எங்கள் மொழி வழித் தாயான தமிழ்நாடும் கலாச்சார தாயான இந்தியாவும் காப்பாற்ற முன்வரவேண்டும்
வ. ஐ. ச. ஜெயபாலன்