சிறுகச் சிறுகச் சேர்த்து!
சிறகு பொத்தி பாதுகாத்து!
உணர்வுகளால் கட்டிக்காத்து!
உருவாக்கிய உலகிலிருந்து!
உபயோகமில்லாப் பொருளாக!
உறவுகளால் உதறப்பட்டு!
வீதியில் விதியை நொந்து!
கதிமுடிந்த பின்பும் எதிர்காலம் தேடி!
போகும்திசை தெரியாமல்!
போகிறர்கள் அந்த!
போக்கத்தப் பெரியவர்கள்!
-அன்புடன் துரை!
''கனவு மெய்ப்பட வேண்டும்''

துரை.ந.உ