ஒரு பசுவின் மனு - தோ.அறிவழகன்

Photo by Ruvim Noga on Unsplash

என்னைப் பார்த்துத்தானே
கூறினீர்கள் ...
தாயை அம்மா என்று !

பெற்ற தாயே தன்
சிசுவுக்குப் பால்தர மறுக்கும்
இக்காலத்தில்-நான்
மறக்கவில்லையே உங்களின்
சிசுவுக்குப் பால் தர !

காய்ந்த தீவனம்,
வடிகட்டிய நீர்,
மிஞ்சிய  சாதம்,
இப்படி உன்னில் எஞ்சியதையே
எனக்கு நீ அளித்தாலும்
உனக்கு நான் அளிப்பது
சுத்தமான கலப்படமில்லா பால் தானே !

என்னில் ஊசி மருந்து செலுத்தி
என் ரத்தத்தை உறிஞ்ச
எவர் கொடுத்தார் உனக்கு அதிகாரம்?
ஏனிந்த பேராசை !

என்னில் செலுத்தும்
ஒவ்வொரு ஊசியும் உன்னைப்
பெற்றவளின் மார்புக் காம்பில்
செலுத்துவதற்குச்  சமம்.

நானாகக்  கொடுத்தால்
பால்.
நீ ஊசியால் கறந்தால்-அது
என் ரத்தம்.

வேண்டாம்  மகனே!
நானே விரும்பிக் கொடுக்கிறேன்
வாழும் வரை !

என்னை வீழ்த்தித் தான்
குடிப்பேன் என்றால் அது
பாலல்ல....விஷம்
தோ.அறிவழகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.