இன்றும் நான் பேருந்தில் தான்!
பயணம் செய்து கொண்டிருக்கிறேன்!
நீ இறங்கிய நிறுத்தத்திலிருந்து.......!
உன்னுடைய விமானப் பயணம்!
எப்படி இருந்த தென்று!
நண்பர்கள் பலர் விசாரித்திருப்பார்கள்!
என்னைத் தவிர....... .!
என்னுடைய விசாரிப்பை!
நீ எதிர்ப்பார்த்திருக்க மாட்டாய்!
என்பதை நானறிவேன்!
நம்முடைய வாழ்க்கை தான்!
எவ்வளவு சீக்கிரத்தில்!
எதார்த்தத்தின் நிழலில்!
சரணடைந்து விட்டது.........!
என்னுடைய டைரியில்!
உனது பெயர் இடம்பெறுவது!
அரிதாகிவிட்டது!
உனது நினைவை எப்பொழுதாவது!
ஒரு முறைத் தூண்டும்!
கனவு கூட இப்பொழுதெல்லாம்!
வருவதில்லை!
நான் உறங்குவதே இல்லையென்பதால்....!
எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா!!
உன்னை மறந்ததில் எனக்கு...!
பெருமிதமாக்த் தான் இருந்தேன்!
உன் குரலை அலைப் பேசியில்!
கேட்கும் வரை......!
எப்படி இருக்கிறாய்?!
என உன் குரல்!
ஒலிக்கையில்.....!
நலமென்று சொல்ல மட்டும்!
பொய்யெனக்கு வரவில்லை!
ஆனால் நீ மட்டும் சொன்னாய்.......!
- தமிழ்ராஜா

தமிழ் ராஜா