எனது அறைகூவல்.. எனது காதல்.. தெரியாமல்!
01.!
எனது அறைகூவல்!
.............................!
என்!
உடம்பைத் தின்ற!
மனிதர்கள் தான் -இப்போது!
என் பெண்மையைப் பற்றி!
விமர்சிக்கிறார்கள் ...!
என்னை!
அங்குலம் அங்குலமாக!
அனுபவித்தவர்கள் தான்!
நான் வேசி என!
விபரிக்கிறார்கள்.....!
எனது!
அதரங்களையும்!
அந்தரங்கங்களையும் அணைத்து!
போதையில் மிதந்தவர்கள் தான்!
என்னை -நடத்தை கெட்டவள் என்று!
நக்கலடிக்கிறார்கள் ...!
நானே சொர்க்கமென!
நாளாந்தம் வந்து போனவர்கள்தான்!
எனக்கு பலவிதமான!
பட்டப் பெயர்களை!
பரிசளித்து மகிழ்கிறார்கள்...!
என்னை அணைத்து!
உடலை நுகர்ந்து!
என் இளமையையும் வாழ்க்கையையும்!
கொள்ளையடித்த கொள்ளைக்காரர்களே!
இன்று-என்னை!
கொல்லப்போவதாய்!
கோஷமிடுகிறார்கள்...!
அரசியல்வாதியிலிருந்து!
அன்றாடங் காய்ச்சி வரை!
ஆடையிழந்து என் முன்னே!
நிர்வாணமாய் கிடந்தவர்கள்!
என்னை துயில் உரிந்து!
துரத்துவதற்கு திட்டமிடுகிறார்கள்..!
சமூகமே சமூகமே !!!
உங்களில் ஒருவன்!
ஒருத்தியோடு வாழ்பவன்!
ஒருவர் வந்து சொல்லுங்கள்!
உடனடியாய் நானும்!
ஊரைவிட்டுப் போகிறேன்..!
02.!
எனது காதல்!
-------------------!
அன்பே!!
அன்று உன்னை!
காதலித்தேன்....!
என் உண்மைக்காதலை!
நீ ஏற்றுக்கொள்ளவில்லை!
தட்டிக்கழித்தாய்...!
இன்றும் உண்னைக் காதலிக்கிறேன்!
ஆனால்...!
தட்டிக்கழிக்க நீயில்லை!!
நீ ஏற்காத!
எனது உண்மைக்காதலினால்!
இப்போது நனைந்துகொண்டிருக்கிறது!
உனது கல்லறை...!
!
03.!
தெரியாமல்!
-----------------!
எங்கள் தேசம்!
மலர்ந்துகொண்டிருப்பதாக!
சிலர் சொல்கிறார்கள்நாங்கள்!
மடிந்துகொண்டிருப்பது!
தெரியாமல்...!
வசந்தம்!
வீசத்தொடங்கியிருப்பதாக!
வாழ்த்துப் பாடுகிறார்கள்!
நாங்கள்!
புயலுக்குள் சிக்குண்டு!
புதைந்து போவது!
தெரியாமல்...!
இழப்புக்களை!
ஈடுசெய்யப்படுவதாக!
பறையடிக்கிறார்கள்!
நாங்கள்!
இழந்தவைகளை!
இனிமேலும் பெறமுடியாதென்று!
தெரியாமல்...!
மீண்டுமொரு புதுவுலகை!
எமக்கு!
தந்திருப்பதாய் மகிழ்கிறார்கள்!
நாங்கள்!
தாய்மண்ணை இழந்துவிட்டு!
தவித்துக்கொண்டிருப்பது தெரியாமல்...!
இனிமேல்!
எமக்கான மீட்பர்களாய்!
நாமுள்ளோமென!
புகழுரைக்கிறார்கள்!
நாங்கள்!
அவலச் சிலுவைகளை!
சுமந்துகொண்டிருப்பது!
தெரியாமல்...!
மன்னிக்க வேண்டும்!
மீட்பர்களே!!
உங்களால் எம்துயரை!
தீர்க்க முடியாது போனால்!
போகட்டும்!
எம்மீது திணித்த!
பாவச்சிலுவைகளையேனும்!
எடுத்து விடுங்கள்!
நாங்கள் நாங்களாகவே!
எமக்கான!
இடர்களை நீக்கி!
எழுந்து கொள்கிறோம்

இராமசாமி ரமேஷ்