நாளை உலகின் முடிவு - கீதா ரங்கராஜன்

Photo by FLY:D on Unsplash

தொலைக்காட்சியில் !
நாளை உலகம் அழியப் போவதாக அறிவித்தனர்!
எங்கும் அமைதி !
யாரும் பரபரக்கவில்லை!
எவர்க்கும் நாளைப் பற்றிய சிந்தையில்லை!
பசி பிணி கடன் பற்றிய நினைவில்லை!
பிறப்பு இறப்பு பற்றிய பயமில்லை!
காமம் க்ரோதம் எதுவும் தலைத்தூக்கவில்லை!
பொது கூட்டங்கள் இல்லை !
பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இல்லை !
உண்ணாவிரத போராட்டஙகளும் இல்லை!
கூச்சல் இல்லை குழப்பம் இல்லை!
பணம் ஏற்படுத்திய வேற்றுமையில்லை!
நிறமில்லை பேதமில்லை !
பகலில்லை இரவில்லை !
யாருக்கும் அடையாளங்களில்லை!
அனைவரும் அமைதியாக உறங்கினர்!
நாளைப் பற்ற்ய உணர்வின்றி.....!
- கீதா ரங்கராஜன்
கீதா ரங்கராஜன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.