குட்டைப்பா வாடையும் குதறிய தலைமுடியும்!
கட்டுக்கடங்கா அலங்காரமும் கவர்ச்சியின் வனப்பும்!
ஆண்களினா டைக்குள் அடைக்கலமான பெண்மையும்!
வீதிகளின் வழியே விகாரமாய்த் தெரிகிறதே...!
சேலையும் தாவணியும் சேராமலே யுடம்பில்!
பாதியாடையும் பறந்திடு நிலையில்!
பண்பாட்டை யுமெம் பண்புகளைத் தெருவில்!
பார்க்கும் கண்களெல்லாம் பழிக்கிறதே...!
நாகரிக மென்றெதை நாளும் வளர்க்கிறாய்!
நாமெலாம் பெண்ணென்பதை நிமிடத்தில் மறக்கிறாய்!
அச்ச மடமென்பதை ஆதிகால பெண்ணுக்கென்கிறாய்!
அடக்கமென்தை அடக்குமுறையென அழுதார்ப்பரிக்கிறாய்...!
பூவுக்கும் புயலுக்கும் புவியரின் வரையரை!
பெண்ணுக்குமா ணுக்கும் பூர்வீக வரைமுறை!
வகுத்திட்டது குற்றமன்று விளங்கிட்டதில் தவறுண்டு...!
அழுகையால் கண்ணீராலல்ல அன்புமடக்கத்தினில்!
ஆளுமையினா திக்கத்தில் ஆதரைமீதினில்!
கலியுக போரட்டம் கரையெட் டிடட்டும்!
கயவரின் கண்களும் கைதொழ துணியட்டும்
த.எலிசபெத், இலங்கை