கொள்ளியும் வைக்கலாம் கோயிலைப் பேசலாம்!
பள்ளியின் சபையிலே பட்டமும் வாங்கலாம்!
வெள்ளியில் போயுமே கொடிகளும் ஏத்தலாம்!
தள்ளி நீ நில்லென யாரவர் சொன்னதாம்.!
வாயினால் கதைத்திட வார்த்தைகள் தேடலாம்!
சேயெனில் நீயுமோ நாலுமே கூறலாம்!
தாயது நிலையினில் தந்தையைத் தேடுறாய்!
நீயுமாய் செய்திட நித்தமும் பிந்திறாய்.!
தத்துவம் சொல்வது எத்துணை வேதமாம்!
நித்தமும் படித்தி;டு நிலைமைகள் புரிந்திடும்!
சத்தியம் சொல்கிறேன் சமயத்தைத் தேடிடின்!
பத்தியம் போலது பக்குவம் நாடிடும்.!
குற்றமும் குறைகளும் எங்குமே உள்ளது!
பற்றதும் பரிவதும் பாரினில் சொத்தது.!
கற்றதும் கேட்பதும் கருப்பொருள் கண்டிடு!
முற்றதும் உணர்ந்தபின் முத்தினைப் பொறுக்கிடு.!
சிந்தனை செய்தபின் சீரெனச் செய்திடு!
வந்தனை பேசிடா வாழ்வினைத் தெரிந்திடு!
எத்தனை சேவைகள் பாரினில் உனக்கென!
அத்துணை இருந்துமேன் உன்மனம் மென்மனம்.!
நாளுமே தேடலில் நல்லவை கண்டபின்!
ஓடியே செய்திடு யாருனைத் தடுத்தது!
செய்திடத் துடிக்கிறாய் என் மனம் சொல்லுது!
பின்னிய வலையினுள் சிலந்தியின் நிலையது.!
!
-த.சு.மணியம்
த.சு.மணியம்