இருட்டு நிழல் தொடர்கிறது ....!
ஒழுகும் வெளிச்ச சுவடுகளினூடே ....!
உயிர் தப்பும் மரணம் ......!
முச்சுக் காற்றின் வெப்பம் !
சுவாச அலைகளாய் ஓட்டம் ......!
சுழலும் காற்றாடி ........!
சாயலின் சலனங்கள் ......!
தீராத ஏக்கங்கள் ஒட்டி இருக்கிறது !
ரத்த நாளங்களில் கூட ....!
எண்ணச் சதுக்கத்தில் மலர்ந்தன !
கல்லறைப் பூக்கள் .....!
நிழல் நீள்கிறது.....!
ஷம்மி முத்துவேல்