விசித்திரச் சித்திரங்கள்.. முற்றாத பயணம்!
01.!
விசித்திரச் சித்திரங்கள்!
------------------------------!
குளிர் நிறைந்த மாலை!
குலவுகின்ற வேளை!
நகைக்கும் நங்கைகள்!
திகைக்கும் ஆணிணைகள்!
புகைக்கும் இளம்பெண்கள்!
புகையும் புது வாழ்க்கை!
குதூகலத்தின் பின்புறம்!
குறுகுறுத்துக் காத்திருக்கிறதோ!
குழப்பங்களின் அந்தப்புரம் ?!
02. !
முற்றாத பயணம்!
----------------------!
வாழ்ந்து களைத்த முகம்!
வடிந்தோடும் சோகம்!
நிம்மதியைத் தேடி!
நெளிந்தோடும் நெற்றிக்கோடுகள்!
எப்போதோ விட்டுவிட்ட எதையோ !
எங்கெங்கெல்லாமோ தேடித்தேடி!
மாய்ந்துபோன கண்களின் கீழே!
காலதேவதையின் கைவண்ணம்!
கவர்ச்சிக் கருவளையம்!
சுயநிறத்தை மறந்து வெகுநாளாகிவிட்ட!
திட்டுத்திட்டாகப் பொட்டல்கள் காட்டும் தலை!
விட்டு அகல மனமில்லை வாழ்க்கைக்கு இன்னும்!
எங்கும் போய்ச்சேராத பாதை!
இன்னும் மிச்சமிருக்கிறதோ!
போகாத ஊருக்குப் போகத்தான் வேண்டுமோ!
இல்லாத சுமையை எல்லாம் தூக்கிக்கொண்டு?
ஏகாந்தன்