உரையாடல்களின் - றஞ்சினி

Photo by engin akyurt on Unsplash

பரப்பிய தாள்களாய்!
அறையெங்கும்!
கலைந்து கிடக்கிறது!
அன்றைய உரையாடல்!
கலவியில் கிறங்கிய!
பொழுதுகள்போல!
மயங்கிக்கிடக்கும் !
உடலையும் !
தாகத்துடன்!
வார்த்தைகளுக்காய்!
அலையும்!
என் கவிதையையும்!
வெற்றுத்தாளின் !
வேதனையையும் !
என்னையும்!
உணரமுடியுமா !
உன்னால்!
-றஞ்சினி
றஞ்சினி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.