சர்ப்பங்கள் நெளியும் மண்!..ஒருவனின் கடைசிப் பக்கத்திலிருந்து...ஊது குழல்கள்!
01.!
சர்ப்பங்கள் நெளியும் மண்!!
----------------------------------!
பட்டங்கள் ஏற்றி தும்பிகள் பறந்து!
இறகுலரா எங்கள்!
பட்டாம் பூச்சிகள் பாடி,ஆடி!
மகிழ்ந்துலவிய மலர் வெளிகள்!
புடையன்கள் உலவும் புதராய்,!
கறையான் களிடமிருந்து!
காப்பாற்றிய காணி,பூமிகள் எல்லாம்!
இன்று சர்ப்பங்களின் புற்றாய்!
யாராலும் எளிதில்!
விளங்கிக் கொள்ள ஏதுவற்ற முறையில்!
சமாதான பட்சிகளின் வாழ்வின் மிச்சம்!
பீதிகளால் மொழி பிரித்திருக்கின்றன!
சுதந்திரத்தை அச்சப் படுத்தியவாறு!
விரிபுடையன்கள்!
மலைப் பாம்புகளின் சாயலில்!
மண் பற்றி,விஷத்தை பீய்ச்சியபடி!
வழி நெடுகிலும்.................,!
புழுதி உறுஞ்சி நெளிகின்றன!
முறையற்று பிறப்பித்த!
“ஹறாம்”குட்டிகளாய்!
மசூதி,மாட்டிறைச்சிக் கடை,!
மையவாடி,தெருக்கோடி என..!
எங்கும் இனி..இப்படித்தான்!
பாம்புகள் ஊரும் ஊருராய்..!
நாட்காலிகளை நகர விடாமல்!
தன் இருப்பை தக்க வைப்பதில்!
குறியென இருக்கும் ஒரு!
சமுகத்தின் குரல்கள் மௌனித்து!
பிணமாய் இருக்கும் நாட்களில்!!
02.!
ஒருவனின் கடைசிப் பக்கத்திலிருந்து...!
--------------------------------------------!
நெஞ்சுரங் கொண்டு நிலம் பற்றி!
நிமிர்ந்து நடந்தவன் நீள் துயிலில்!
அவனின் பிறப்பிலிருந்து மொழிபிரித்த!
வாழ்வின் கடைசிப் பக்கத்தை இன்று!
வாசித்து முடித்திருந்தது காலம்!
பரீட்சயங்களை மீறிய பரபரப்பாய்!
பெரும் பரப்பை தன் பிடிக்குள் வைத்து!
கோலோச்சியவனால்!
மரணத்தை எதிர்கொள்ள முடியவில்லை!
அது வென்றுபோனது அவனை வீழ்த்தி!
இடுவம்புகளால் வளர்ந்த நெடு வாழை!
கொழுகொம்பு இன்றி குலை முறிந்து!
ஆறடிக்குள் அடங்கும் கூடாய் இந்நொடி!
ஒரு காலத்தில் குகைகள் ஏகி!
சிங்கத்தை கர்ஜித்து சீண்டிப் பார்த்தவன்!
இன்று ஈயை விரட்ட இயலா ஜடம்!
உருகி,உருகி கரைந்தன அவனை சுற்றியிருந்த!
மலைகளும்,கூழாங்கற்களும்!
ஊர் குருவிகள் அவனால் நேர்ந்த கதிகளின்!
இலாப,நஷ்ட்டங்கள் பற்றி சிலாகித்தன!
பேசாதிருந்தவனும் தன்பங்குக்கு!
உடைந்து போய் நிற்கிறான் கால்மாட்டில்!
அவனின் கடைசிப் பக்கத்திலிருந்து!
பின் குறிப்புகள் தலை நீட்ட!
நிஷப்தம் கலைய வேண்டும் என்றே!
பிரளையம் முடக்கி விடப் படுகின்றது!
அவன் உள்ளவரை!
தெவதூதர்களை போலும்,!
தாசில் தாரர்கள் போலும் இருந்தவர்கள்!
ஆனால்;இப்போது!
மேல் சொன்ன எதிலும் இல்லாத!
“களிசடைகளாய்”வசைகளால் வாழ்த்த!
அவர்களின் முழுப் பக்கங்களும் விரிகின்றன!
சொத்தை பங்கிடும் பட்சா தாபங்களில்!!
ஏலவே தெரிந்திருப்பின் அவன்!
எப்போதோ இறந்திருக்கலாம்!!!
03.!
ஊது குழல்கள்!
------------------------!
ஊது குழல்களினுடே!
யாரோ ஒருவனின்!
ஏவலிலிருந்துதான் புறப்படுகிறது!
அமைதியை குலைக்கும் மகுடி!
இதிலிருந்து அறிய முடிகிறது!
பாம்புகளுக்கு உரித்தான!
பாடுபொருள் கொண்டு!
மான்களை வேட்டையாட!
நாணேற்றப் படுகிறதென்று!
பரீட்சய முகத்தோடு!
காவிகளுக்குள் பேயாய்!
அலைகின்ற ஆவியை!
விசுவாசமுள்ள மிருகங்களுக்கு தெரியும்!
ஆயினும்;!
வால் குழைத்து!
கிடக்க வேண்டியிருக்கிறது!
அவன் வீசும் எச்சில்களுக்காக
ரோஷான் ஏ.ஜிப்ரி