இருள் சூழ்ந்த மனவெளியில்!
கலக்கங்கள் கனதிகளாய்.!
பலயீனப் பயிகளது!
விதைத்திட விரும்பாதே!!
நாவூதனில் நளனில்லை!
எல்லைதனை கடக்கையில்!
முட்டாளின் மூலதனமது!
முடிந்தவரை முடக்கிக் கொள்!!
பார்வைதனை பரிகொண்ட!
என்னொல்லா ஜாஹிலியம்!
சாத்தானின் ஈர்ப்பு அது!
விலகிக் கொள் தவறாதே!!
செயல்கள் அனைத்திற்கும்!
நிச்சயம் கூலியுண்டு!
எண்ணங்கள் தூய்மையெனில்!
செயல்களும் தூய்மைப்படும்!
!
உன்தனில் நீயாயிரு!
உண்மைதனில் தீயாயிரு……
ரம்சின் நிஸாம்